1. Home
  2. தமிழ்நாடு

குட் நியூஸ்..! பி.எஃப். நிதியில் இருந்து பணம் எடுக்கும் வரம்பு ரூ.5 லட்சமாக உயர்வு..!

1

மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சர் மன்சுக் மாண்டவியா கூறியதாவது: கல்வி, மருத்துவம், திருமணம் மற்றும் வீடு கட்டுவதற்காக வருங்கால வைப்பு நிதியில் இருந்து தானாக பணம் எடுக்கும் (ஆட்டோ-கிளைம்) உச்ச வரம்பு முன்பு ரூ.1 லட்சமாக இருந்தது. இனி அது தற்போது ரூ.5 லட்சமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், இபிஎப்ஓ வாடிக்கையாளர்கள் இனி எந்த தலையீடும் இன்றி எளிதாக பணத்தை பெற்றுக்கொள்ள முடியும். பழைய செயல்முறையைப் போலவே ஆட்டோ கிளைம் மூலம் இதற்கும் மூன்று நாட்களில் தீர்வு காணப்படும்.

வாடிக்கையாளர்களுக்கு வேகமான, மிகவும் செயல்திறன் வாய்ந்த சேவைகளை தானியங்கி முறையில் தரவேண்டும் என்பதில் இபிஎப்ஓவுக்கு உள்ள அக்கறையை இது எடுத்துக்காட்டுவதாக உள்ளது. இவ்வாறு மாண்டவியா தெரிவித்தார்.

Trending News

Latest News

You May Like