1. Home
  2. தமிழ்நாடு

குட் நியூஸ்..! வந்தாச்சு பட்டா மாறுதலில் சூப்பரான வசதி..!

1

சொத்துக்கள் வாங்குவதற்கும், விற்பதற்கும் பத்திரம் மற்றும் பட்டாவை சரி பார்க்க வேண்டியது அவசியம். பத்திர பதிவிற்கும், கட்டட அனுமதிக்கும் பட்டா சரியாக இருக்க வேண்டும். தமிழ்நாட்டில் ஆன்லைன் வாயிலாக பட்டா பெறுவதற்கான வசதி சமீபத்தில் அரசு அறிமுகம் செய்து வைத்தது. இதற்காகவே தமிழ் நிலம் (https://tamilnilam.tn.gov.in/citizen/) என்ற இணையத்தளம் பிரத்யேகமாக உருவாக்கப்பட்டது.

இந்நிலையில் சொத்துப்பதிவு செய்பவர்கள், பட்டாவிலும் பெயர் மாற்றம் செய்ய தமிழ்நாடு அரசு அரசாணை பிறப்பித்துள்ளது. பத்திரத்தில் பெயர் மாற்றம் செய்ய ஆன்லையில் விண்ணப்பிக்கலாம். உட்பிரிவற்ற பட்டா மாற்றமா அல்லது உட்பிரிவுடன் பட்டா மாற்றமா என்ற தகவல்களை அடிப்படையாக கொண்டு ஆன்லைனில் பட்டா மாற்றம் செய்ய விண்ணப்பிக்கலாம்.

பொதுவாக ஒருவர் சொத்துக்களை வாங்கும் போதும் யாருடைய பெயரில் பட்டா உள்ளது. நில அளவை வரைப்படம் போன்றவற்றை ஆய்வு செய்ய வேண்டியது அவசியம். இந்நிலையில் இந்த தகவல்களை ஆன்லைன் வாயிலாக பார்வையிட வருவாய் துறை புதிய வசதி ஒன்றை அறிமுகம் செய்யவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கடைசியாக வழங்கப்பட்ட பட்டா தொடர்பான விவரங்களை பெறுவதற்கு சர்வே எண், மாவட்டம், தாலுகா, உட்பிரிவு எண் போன்ற தகவல்களை அளிக்க வேண்டும். சொத்துக்களின் பட்டா தொடர்பான முந்தைய மாற்றங்களை அறிந்து கொள்ள அறிமுகப்படுத்தப்படவுள்ள வசதியால் சொத்து அபகரிப்பு போன்ற மோசடிகளை தடுக்க இயலும்.

தற்போது பதிவுத்துறையால் வில்லங்க சான்றிதழ் வழங்கப்படுகிறது. இதில் சொத்துக்களுக்கான சர்வே, உட்பிரிவு எண் மற்றும் முந்தைய பத்திரப்பதிவு விபரங்கள் இடம்பெற்றிருக்கும். இந்நிலையில் முந்தைய பட்டா மாறுதல் தொடர்பான விபரங்களையும் வருவாய் துறை வழங்க இருக்கிறது. ஆன்லைனில் விரைவில் இந்த தகவல் மக்களுக்கு கிடைக்க வழிவகை செய்யப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. இது பொதுமக்களுக்கு மிகவும் உதவிக்கரமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Trending News

Latest News

You May Like