1. Home
  2. தமிழ்நாடு

குட் நியூஸ்..! உஸ்மான் சாலை மேம்பாலத்தில் வாகனங்களை நிறுத்த அனுமதி..!

1

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, புத்தாடை மற்றும் இனிப்பு வாங்க தி.நகருக்கு அதிக அளவில் மக்கள் குவிய துவங்கியதால், போதிய 'பார்க்கிங்' வசதியின்றி, மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.தீபாவளி பண்டிகைக்கு இன்னும் ஒரு வாரமே உள்ள நிலையில், கூட்டம் இன்னும் அதிகரிக்க வாய்ப்புள்ளது.

இந்நிலையில்  மேம்பால பணிக்காக போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ள உஸ்மான் சாலை மேம்பாலத்தில் வாகனங்களை நிறுத்த மாநகராட்சி அனுமதி அளித்துள்ளது.இங்கு 70 கார்கள், 1000-க்கும் மேற்பட்ட பைக்குகளை நிறுத்த இடவசதி உள்ளதாக அதிகாரிகள் தகவல் அளித்துள்ளது.

போக்குவரத்து உதவி கமிஷனர் ராஜா கூறியதாவது:
 

உஸ்மான் சாலை மேம்பாலத்தில் வாகனங்களை நிறுத்த, வேண்டிய ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. இந்த மேம்பாலத்தின் இருபுறமும் வாகனங்கள் நிறுத்தப்படும். இதில், 70 கார்கள் மற்றும் 2,000 'பைக்'குகள் நிறுத்த முடியும்.
 

இன்று முதல் வாகனங்களை நிறுத்த அனுமதிக்கப்படும். அதேபோல், தனியார் பள்ளிகளையும் கேட்டுள்ளோம். சனி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் வாகனங்களை நிறுத்த, பள்ளி நிர்வாகங்கள் அனுமதி வழங்கி உள்ளன.
 

எங்கெல்லாம் வாகன நிறுத்தங்கள் உள்ளன என்பதை வாகன ஓட்டிகள் எளிமையாக அறியும் வகையில், தி.நகர் மற்றும் பாண்டி பஜார் பகுதிகளில் ஆங்காங்கே, அறிவிப்பு பலகை வைக்கப்படும்.
 

இவ்வாறு அவர் கூறினார்.

 

Trending News

Latest News

You May Like