குட் நியூஸ்..! விரைவில் 'வந்தே மெட்ரோ' ரயில் சேவை தொடக்கம்!
நாடு முழுவதும் அதிவேகத்தில் இயக்கப்படும் சொகுசு ரயில்களான வந்தே பாரத் ரயில்களுக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ள நிலையில், 100 முதல் 250 கிலோ மீட்டர் வரை உள்ள வழித்தடங்களை, அதாவது அருகருகே இருக்கும் இரு முக்கிய நகரங்களை இணைக்கும் வகையில் வந்தே பாரத் ரயில்களில் இருக்கும் அனைத்து வசதிகளுடன், வந்தே மெட்ரோ ரயில்கள் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.
வந்தே மெட்ரோ ரயில் மூலம் 124 முக்கிய நகரங்களை இணைக்க ரயில்வே துறை திட்டமிட்டுள்ள நிலையில் அதில் லக்னோ - கான்பூர், ஆக்ரா - மதுரா, டெல்லி, - ரிவாரி, புவனேஸ்வர் -பாலசோர், திருப்பதி - சென்னை ஆகிய வழி தடங்களும் உள்ளன
இந்த ரயில் மணிக்கு 130 கிலோமீட்டர் வேகத்தில் இயக்கப்படும் என்றும் 12 பெட்டிகள் முதல் 16 பெட்டிகள் வரை இந்த ரயிலில் இருக்கும் என்றும் கூறப்படுகிறது. மேலும் முன்பதிவு செய்யாத பயணிகளும் இதில் பயணம் செய்யும் வகையில் ஏற்பாடு செய்யப்படும் என்றும் ரயில் முழுவதும் ஏசி வசதி செய்யப்படும் என்றும் ரயில்வே துறை அறிவித்துள்ளது.
இந்த ஆண்டு ஜூலை மாதத்திற்குள் சோதனை ஓட்டம் தொடங்கும் என ரயில்வே வட்டாரங்கள் தெரிவித்தன. வந்தே மெட்ரோ புத்தம்புதிய தொழில்நுட்பத்துடன் அறிமுகப்படுத்தப்படும். பெருகிவரும் நகர்ப்புற மக்களின் பயணத் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில் இந்தப் புதிய திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.
வந்தே மெட்ரோவில் தானியங்கி கதவுகள் மற்றும் ஏற்கனவே உள்ள மெட்ரோ ரயில்களில் இல்லாத பல அம்சங்கள் உள்ளிட்ட அமைப்புகள் இருக்கும்.தற்போது அறிமுகப்படுத்தப்பட உள்ள இந்த வந்த மெட்ரோ ரயில் களில் முன்பதிவு செய்ய தேவையில்லை நேரடியாக டிக்கெட் பெற்று ரயில்களில் பயணம் செய்ய முடியும. இந்த ரயில் முழுவதும் ஏசி வசதி செய்யப்பட்டுள்ளது.