1. Home
  2. தமிழ்நாடு

குட் நியூஸ்..! விரைவில் தூங்கும் வசதியுடன் வந்தே பாரத் ரயில்..!

Q

இந்தியாவில் வந்தே பாரத் ரயில்கள் அறிமுகமான பின்பு பல முக்கிய நகரங்களை இணைப்பதற்காக ரயில்வே நிர்வாகம் வந்தே பாரத் ரயில்களை அறிமுகப்படுத்தி வருகிறது. இந்த ரயில் மற்ற ரயிலை விட அதிக வேகத்தில் அதே நேரம் அதிக சொகுசாம்சங்களுடன் பயணிக்கும் ரயிலாக இருப்பதால் இந்த ரயிலுக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருக்கிறது.

ஆனால் இதுவரை வந்தே பாரத் ரயில்கள் எல்லாம் பெரும்பாலும் பகல் நேர ரயிலாக உள்ளன. இதனால் அமரும் இருக்கை வசதி கொண்ட வந்தே பாரத் ரயில்கள் மட்டுமே பயன்படுத்தப்பட்டு வந்தது. இரவு நேரத்தில் பயணிக்கும் வகையிலான வந்தே பாரத் ரயில் இதுவரை தயாரிக்கப்படாததால் இரவு நேரம் வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்படாமல் இருந்தது.

இந்நிலையில், தற்போது சீட்டிங் வசதியுடன் மட்டும் கூடிய வந்தே பாரத் ரயில்கள் மக்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், படுக்கை வசதியுடன் கூடிய வந்தே பாரத் ரயிலுக்கு பலர் காத்துக் கொண்டிருக்கிறார்கள்.

இந்த படுக்கை வசதியுடன் கூடிய வந்தே பாரத் ரயில்கள் மிக நீண்ட தூரத்தில் இருக்கும் நகரங்களை இணைக்கும் வகையில் அறிமுகப்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் வரும் நவம்பர் மாதம் முதல் 16 பெட்டிகளை கொண்ட வந்தே பாரத் ரயில் இயக்கப்பட உள்ளதாக ஐசிஎப் ரயில்வே நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது. அசௌகரியங்களை டாக் பேக் மூலம் ரயில் ஓட்டுநருக்கு தெரிவிக்கும் வசதி, ஸ்விட்ச் மூலம் இயங்கக்கூடிய கதவுகள், கவாச் எனப்படும் தானியங்கி பிரேக் , சிசிடிவி கேமரா வசதியுடன் இனி படுக்கை வசதியும் அமைக்கப்பட்டுள்ளது.


 

Trending News

Latest News

You May Like