1. Home
  2. தமிழ்நாடு

குட் நியூஸ்..! இனி அரசு விரைவு பேருந்துகளில் யுபிஐ மூலம் டிக்கெட் எடுக்கலாம்..!

1

தமிழகத்தில் இயக்கப்படும் பேருந்துகளில் 72% பேருந்துகள் அரசு போக்குவரத்துக் கழகங்கள் மூலம் இயக்கப்பட்டு வருகிறது.அந்த வகையில் தமிழக அரசு விரைவு போக்குவரத்துக் கழகம் மாநகர போக்குவரத்து கழகம் மற்றும் சேலம், கோவை, மதுரை, நெல்லை, கும்பகோணம், விழுப்புரம் என எட்டு அரசு போக்குவரத்து கழகங்களின் கீழ் இந்த பேருந்துகள் இயக்கப்படுகிறது.

இந்த அரசு விரைவு போக்குவரத்து கழகத்தில் மிதவை பேருந்துகள் குளிர்சாதன பேருந்துகள் குளிர்சாதன படுக்கை மற்றும் இருக்கை வசதி கொண்ட பேருந்துகள் சாதாரண பேருந்துகள் கழிப்பறை வசதி கொண்ட பேருந்து ஆகியவை இயக்கப்பட்டு வருகிறது.இந்த பேருந்துகளில் ஒரு மாதத்திற்கு முன்பே இணையதளம் மற்றும் செல்போன் செயலின் மூலம் ஆன்லைனில் முன்பதிவு செய்யும் வசதிகள் உள்ளது.

தொலை தூரங்களுக்கு செல்லும் பேருந்துகளில் சில நேரங்களில் சில்லறை தட்டுப்பாடு காரணமாக நடத்துனர்களுக்கும் - பயணிகளுக்கும் இடையே வாக்குவதம் ஏற்படுவதையும் பார்க்க முடியும். இந்த நிலையில் பயணிகளின் வசதிக்காகவும் தொழில்நுட்ப வளர்ச்சியை மேம்படுத்தவும் அரசு பேருந்துகளில் யுபிஐ மூலம் டிக்கெட் எடுக்கும் வசதியை அறிமுகப்படுத்த தமிழக அரசு திட்டமிட்டது.

இந்த வசதியை பொறுத்தவரை, நடத்துனர்களிடம் ஒரு க்யூ ஆர் கோடு இருக்கும். அவர்களின் டிக்கெட் பிரிண்ட் செய்யும் எந்திரத்தின் பின்புறம் பொதுவாக இந்த கோடு வைக்கப்பட்டு இருக்கும். டிக்கெட் நடத்துனரிடம் யுபிஐ மூலமாக பணம் செலுத்தும் விவரத்த்தை கூறினால் அவர் கியூ ஆர் கோடை உங்களிடம் காண்பிப்பார். அதன்பின் வழக்கமாக நாம் கடைகளில் பணம் அனுப்புவது போலவே .. இதற்கு பணம் அனுப்பலாம். டிக்கெட் தொகையை அவர் கூறிய பின் செலுத்திவிட்டு செலுத்திய தொகையை காட்டினால் டிக்கெட் கொடுக்கப்படும். தற்போது இந்த வசதி சென்னை மாநகர பேருந்துகளில் உள்ளது. சோதனை முயற்சியாக சில பேருந்துகளில் மட்டும் இதை பார்க்க முடியும்.

இதனை அடுத்து சென்னை திருச்சி சேலம் மதுரை நெல்லை கோவை உள்ளிட்ட பகுதிகளுக்கு இயக்கப்படும் அரசு பேருந்துகளில் யுபிஐ மூலம் பயணச்சீட்டு கட்டணம் செலுத்தும் சாதனங்கள் அறிமுகப்படுத்தப்பட்டு படிப்படியாக அடுத்த மூன்று ஆண்டுகளில் அனைத்து போக்குவரத்துக் கழகங்களிலும் இந்த சேவை விரிவு படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டது.

பெரிய மெட்ரோ நகரங்கள் முதல் குக்கிராமங்கள் வரை கூகுள் பே, போன் பே மூலமாக மக்கள் பணம் செலுத்தி வருகிறார்கள். தற்போது அரசு பேருந்துகளில் யுபிஐ மூலமாக பணம் செலுத்தும் வசதி வந்திருப்பது பயணிகளுக்கு நல்ல வசதியாக இருக்கும் என்று தெரிகிறது.

Trending News

Latest News

You May Like