1. Home
  2. தமிழ்நாடு

குட் நியூஸ்..! வந்தாச்சு ரேஷன் கடைகளுக்கு யுபிஐ..!

1

தமிழகத்தில் உள்ள அனைத்து ரேஷன் கடைகளிலும் கடந்த மே மாதம் முதல் கூகுள் பே, போன் பே, பேடிஎம் போன்ற யுபிஐ செயலிகள் மூலம் பணம் செலுத்தும் முறையை அமல்படுத்துமாறு கூட்டுறவுத்துறை தெரிவித்துள்ளது.

இந்த நிலையில் ரேஷனில் பொருட்களை வாங்கும் முறையை மேலும் எளிமையாக்கும் விதமாக தமிழ்நாடு ரேஷன் கடைகளில் இன்று முதல் பேடிஎம் வழியாக பணம் செலுத்தும் நடைமுறை அமலுக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

உங்களிடம் பேடிஎம் இல்லை என்றாலும் வேறு யுபிஐ வழியாகவும் பணம் செலுத்த முடியும். இந்த பணம் நேரடியாக அரசுக்கு சென்று சேரும். அதனால் மக்கள் பணம் அரசுக்கு சென்று சேர்வதோடு மக்களும் எளிதாக பணத்தை செலுத்த முடியும். மேலும் இதன் மூலம் சில்லறை முறைகேடுகள் பல தடுக்கப்படும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

முதல் கட்டமாக ஒவ்வொரு மாவட்டத்திலும் 10 நியாய விலை கடைகளில் இந்த திட்டம் கொண்டு வரப்படுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. மத்திய கூட்டுறவு வங்கியுடன் இணைந்து UPI செயலிகள் வாயிலாக பண பரிவர்த்தனை செய்ய முடியும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

Trending News

Latest News

You May Like