1. Home
  2. தமிழ்நாடு

குட் நியூஸ்..! முன்பதிவில்லா ரயில் பயணிகளுக்கு இனி ரூ.20-க்கு சாப்பாடு..!

1

இந்திய ரயில்வே உணவு வழங்கல் மற்றும் சுற்றுலாக் கழகம் சார்பில் புதிய திட்டம் ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.குறிப்பாக, முன்பதிவு இல்லா பெட்டிகள் நிற்கும் இடத்தின் அருகிலேயே விற்பனை நிலையம் அமைக்கப்பட்டுள்ளதாகவும் தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

இதன்படி, மூன்று ரூபாய்க்கு தண்ணீர் பாட்டில், 20 ரூபாய்க்கு 200 கிராம் எடையில் எலுமிச்சை, புளியோதரை, தயிர் சாதம் அல்லது கிச்சடி ஆகியவை 'எக்கனாமி மீல்ஸ்' என்ற பெயரில் விற்பனை செய்யப்படுகிறது. 

மேலும், 'ஜனதா கானா' என்ற பெயரில் 325 கிராம் எடையில் பூரி மற்றும் மசால் மற்றும் பஜ்ஜி ஆகியவை ரூ.20-க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதுமட்டுமல்லாமல், 350 கிராம் எடையில் மசால் தோசை உள்ளிட்ட தென்னிந்திய உணவு வகைகள் 'ஸ்னாக் மீல்ஸ்' என்ற பெயரில் 50 ரூபாய்க்கும், 200 மில்லி லிட்டர் தண்ணீர் பாட்டில் 3 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. 

மேலும், இந்த திட்டம் கடந்த ஏப்ரல் 17ஆம் தேதி முதல் அமல்படுத்தப்பட்டுள்ளது. அதிலும், சென்னை கோட்டம் - 5, திருச்சி கோட்டம் 3, சேலம் கோட்டம் 4, மதுரை கோட்டம் 2, பாலக்காடு கோட்டம் 9, திருவனந்தபுரம் கோட்டம் 11 என தெற்கு ரயில்வே தரப்பில் 39 ரயில் நிலையங்களில் முதல் கட்டமாக இத்திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.

Trending News

Latest News

You May Like