குட் நியூஸ்..! டேனிஷ் கோட்டையை சுற்றுலா பயணிகள் இலவசமாக பார்வையிடலாம்..!
மயிலாடுதுறை மாவட்டத்தில் வங்க கடலை ஒட்டி ஐரோப்பிய நாட்டினார் கட்டிய 400 ஆண்டுகள் பழமை வாய்ந்த கோட்டை அமைந்துள்ளது. இந்த கோட்டைக்கு வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் அதிக அளவு வருகை தருகின்றார். 1620 ஆம் ஆண்டு டென்மார்க் நாட்டினார் இந்தியாவில் வர்த்தக மையத்தை அமைக்க முடிவு செய்த பொழுது டேனிஷ் கோட்டை அமைக்க முடிவு செய்தனர்.
60 மீட்டர் நீளமும் 11 மீட்டர் அகலமும் கொண்டுள்ளது கோட்டையின் மையத்தில் அருங்காட்சியகம் அமைந்துள்ள நிலையில் சமையலறை கோட்டையில் உள்ளே இருக்கும் குடியிருப்புகளின் வாயில் மற்றும் முக்கிய தெருக்கள் ஒரு சிறிய ஐரோப்பிய நகரத்தின் தோற்றத்தில் அமைக்கப்பட்டுள்ளது.
மேலும் இங்குள்ள அருங்காட்சியகத்தில் பல நூறு ஆண்டுகளுக்கு முன்பாக தமிழர்கள் மற்றும் டேனிஸ்காரர்கள் பயன்படுத்திய பொருட்கள் 1200 ஆண்டுகள் பழமையான சிலைகள், பீங்கான்கள், டேனிஷ் அரசர்களின் போட்டோ மற்றும் போர் கருவிகளும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.
மேலும் தரங்கம்பாடி வந்த பிரம்மாண்டமான கப்பலில் உடைந்த பாகங்களும் இங்க காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது அதனால் ஏராளமானோர் இங்கு வருவதற்கு ஆர்வம் கொண்டுள்ளனர் மேலும் கோட்டையின் தரைதளத்தில் சிறைச்சாலை பீர் மற்றும் ஒயின் கிடங்கு அறைகள், ஓய்வறைகள், பண்டக வைப்பறை, வெடி மருந்து அறை போன்றவை காணப்படுகின்றது.
தொல்லியல் துறை மற்றும் டேனிஷ் அரசு குடும்பத்தின் உதவியுடன் இந்த கோட்டை பழமை மாறாமல் சீரமைக்கப்பட்டு பராமரித்து வருகின்றனர். மேலும் இந்த கோட்டையின் பின்புறமாக கடலுக்குள் இறங்கி செல்வதற்காக படிக்கட்டு வசதியும் அமைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், உலக பாரம்பரிய வாரம் கடைபிடிக்கப்படுவதை ஒட்டி டேனிஷ் கோட்டையை 25ம் தேதி வரை சுற்றுலா பயணிகள் இலவசமாக பார்வையிடலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.