1. Home
  2. தமிழ்நாடு

குட் நியூஸ்! இந்த ரேஷன் கார்டு உள்ளவர்கள் மகளிர் உரிமைத் தொகைக்கு விண்ணப்பிக்கலாம்..!!

1

மகளிர் உரிமைத் தொகைக்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம், யாரெல்லாம் விண்ணப்பிக்கக்கூடாது :

ரேஷன் கார்டு இருந்தால் மட்டுமே இந்த திட்டத்துக்கு விண்ணப்பிக்க முடியும். அதேநேரத்தில் ரேஷன் கார்டு வைத்திருப்பவர்கள் எல்லோரும் விண்ணப்பிக்க முடியாது.  உதாரணத்துக்கு பொருளில்லா ரேஷன் கார்டு வைத்திருப்பவர்கள் விண்ணப்பிக்க முடியாது.முன்னுரிமை ரேஷன் கார்டு, முன்னுரிமையற்ற ரேஷன் கார்டு, அந்தியோதயா அன்ன யோஜனா ரேஷன் கார்டு வைத்திருப்பவர்களுக்கு கலைஞர் மகளிர் உரிமைத் தொகை ரூ.1000 கிடைக்கும். இவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

அதேநேரத்தில் தனிநபர் குடும்ப அட்டை வைத்திருப்பவர்கள் உள்ளனர். அவர்கள் கலைஞர் உரிமைத் தொகை திட்டத்துக்கு விண்ணப்பிக்க முடியுமா என்ற சந்தேகம் இருக்கிறது. அவர்கள் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்துக்கு விண்ணப்பிக்கலாம்.  

அரசு வகுத்திருக்கும் விதிமுறைகளுக்கு உட்பட்டு இருந்தால் மேற்கூறிய ஏதேனும் ஒரு ரேஷன் அட்டை வைத்திருந்தால் கட்டாயம் இந்த திட்டத்துக்கு விண்ணப்பிக்க முடியும்.  மேலும், ரேஷன் அட்டை இருந்து கலைஞர் மகளிர் உரிமைத் தொகை விதிமுறைகளில் ஏதேனும் ஒன்றை மீறியிருந்தாலும் விண்ணப்பம் நிராகரிக்கப்படும்.  

அதாவது, உங்கள் வருமானம் 2.5 லட்சம் ரூபாய்க்கு மேல் இருக்கக்கூடாது. சொந்த பயன்பாட்டுக்காக நான்கு சக்கர வாகனங்கள் வைத்திருக்கக்கூடாது. இதுதொடர்பான முழு விதிமுறைகளும் தெரிந்து கொண்டு கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்துக்கு விண்ணப்பிக்கவும். 

ஒருவேளை இதுவரை தனிநபராக இருந்து ரேஷன் அட்டை பெறவில்லை என்றால், முதலில் தனிநபர் ரேஷன் அட்டை பெற விண்ணப்பிக்க வேண்டும். அந்த கார்டு வந்த பிறகு கலைஞர் மகளிர் உரிமைத் தொகை  திட்டத்துக்கு விண்ணப்பிக்கலாம்.

உங்களுக்கு தனிநபர் ரேஷன் கார்டு வேண்டும் என்றால் இப்போது நடைபெறும் உங்களுடன் ஸ்டாலின் முகாமில் தனிநபர் ரேஷன் கார்டுக்கு விண்ணப்பிக்கலாம். அந்த கார்டு வந்த பிறகு தமிழ்நாடு அரசு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கும் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்துக்கும் விண்ணப்பிக்கலாம்.

Trending News

Latest News

You May Like