குட் நியூஸ்..! 5 ஆண்டுக்கு மேல் வசிப்போருக்கு பட்டா... ஆனால் ஒரு கண்டிஷன்..!

புறம்போக்கு இடங்களில் வசிக்கும் மக்களுக்கும் பட்டா வழங்குவது குறித்தும் தங்கம் தென்னரசு முக்கிய அறிவிப்பை வெளியிட்டார்.
இது தொடர்பாக அவர் தனது பட்ஜெட் உரையில், "சென்னை மாநகர் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் ஆட்சேபனை இல்லாத புறம்போக்கு இடங்களில் 10 ஆண்டுகளுக்கு மேல் வசிக்கும் தகுதி வாய்ந்த குடும்பங்களுக்கும், அதேபோல மாவட்ட தலைநகரங்களில் 16 கிமீ சுற்றளவில் உள்ள பகுதிகள், நகராட்சி மற்றும் பேரூராட்சிகளில் 8 கிமீ சுற்றளவில் உள்ள பகுதிகளில் வீட்டுமனை ஒப்படை வழங்க விதிக்கப்பட்ட தடை ஆணை ஒரு முறை தளர்வு செய்யப்படுகிறது.
மேலும், ஆட்சேபனை இல்லாத புறம்போக்கு இடங்களில் 5 ஆண்டுகளுக்கு மேல் வசிக்கும் மக்களுக்கும் பட்டா வழங்கப்படும்" என்றார். அதாவது புறம்போக்கு நிலங்களில் வசிக்கும் அனைவருக்கும் பட்டா இல்லை.. ஆட்சேபனை இல்லாத புறம்போக்கு இடங்களில் வசிப்போருக்கு மட்டுமே பட்டா வழங்கப்படும்.