1. Home
  2. தமிழ்நாடு

குட் நியூஸ்..! இந்த மசாலா தயாரிப்புகளில் புற்றுநோயை உண்டாக்கும் ரசாயனம் இல்லை..!!

Q

எம்டிஹெச் மற்றும் எவரெஸ்ட் ஆகியவற்றால் விற்கப்படும் சில மசாலாப் பொருட்களில் அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிகமான ரசாயனம் இருப்பதாக ஹாங்காங் உணவு ஆணையம் குற்றம் சாட்டியதைத் தொடர்ந்து இந்தியா விசாரணைக்கு உத்தரவிட்டது. சர்வதேச அளவில் ஹாங்காங் மட்டுமன்றி சிங்கப்பூரும் சேர்ந்து கொண்டதில், இந்திய மசாலாக்களுக்கு எதிரான சர்ச்சை, அவற்றின் ஒட்டுமொத்த ஏற்றுமதி பாதிக்கப்படும் அளவுக்கு நிலைமை மோசமானது.
இதனிடையே ஏப்ரல் 22 அன்று அனைத்து மாநில மற்றும் யூனியன் பிரதேச உணவு பாதுகாப்பு ஆணையர்கள் மற்றும் பிராந்திய இயக்குநர்களை உள்ளடக்கிய நாடு தழுவிய ஆய்வு இயக்கத்தை எஃப்எஸ்எஸ்ஏஐ தொடங்கியது. இது எவரெஸ்ட் மற்றும் எம்டிஹெச் மசாலாப் பொருட்களின் மாதிரிகளை சோதனைக்காக சேகரித்தது. மகாராஷ்டிரா மற்றும் குஜராத்தில் உள்ள எவரெஸ்டின் கிடங்கு சேமிப்பகத்தில் இருந்தும், டெல்லி, ஹரியானா மற்றும் ராஜஸ்தானில் உள்ள எம்டிஹெச் சேமிப்பில் இருந்தும் மாதிரிகள் சோதனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன.
ஈரப்பதம், பூச்சிகள், கன உலோகங்கள், அஃப்லாடாக்சின்கள், பூச்சிக்கொல்லி எச்சங்கள் மற்றும் பல்வேறு நுண்ணுயிரியல் அசுத்தங்கள் உள்ளிட்ட பல அளவுருக்கள் மீது சோதனை தொடர்ந்தது. அங்கீகாரம் பெற்ற ஆய்வகங்களில் எத்திலீன் ஆக்சைடுக்கான மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டன. இவற்றில் எஃப்எஸ்எஸ்ஏஐ இதுவரை 28 ஆய்வக அறிக்கைகளைப் பெற்றுள்ளது.
அறிக்கையின்படி, ஆய்வுக்குழு இதர பிராண்டுகளின் 300 மசாலா மாதிரிகளை ஆய்வு செய்தது, ஆனால் புற்றுநோயை உண்டாக்கும் எத்திலீன் ஆக்ஸைடின் தடயம் கிடைக்கவில்லை. இந்த ஆய்வு முடிவுகள், மேற்படி இந்திய தயாரிப்புகள் நுகர்வுக்கு பாதுகாப்பானவை என்பதைக் காட்டுகிறது. சர்ச்சைக்கு ஆளான இரு நிறுவனங்களால் விற்கப்படும் மசாலாப் பொருட்களின் மாதிரிகளில் தொடங்கி, பரவலாக சோதனைகள் மேற்கொள்ளப்பட்டதில் எஃப்எஸ்எஸ்ஏஐ இந்த முடிவுக்கு வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

Trending News

Latest News

You May Like