1. Home
  2. தமிழ்நாடு

குட் நியூஸ்..! இனி ரேஷன் கடைகளில் இந்த பொருட்களும் கிடைக்கும்..!

1

தமிழகத்தில் உள்ள ரேஷன் கடைகளின் வாயிலாக அரிசி, பருப்பு, எண்ணெய், கோதுமை உள்ளிட்ட ரேஷன் பொருட்கள் மலிவு விலையில் வழங்கப்பட்டு வருகிறது. மேலும், ரேஷன் கடைகளில் கூடுதலாக நீலகிரி மாவட்டத்தில் விளையும் தேயிலை தூளை விற்பனை செய்யவும் ரேஷன் நிர்வாகம் முடிவெடுத்துள்ளது.

இந்நிலையில், கூட்டுறவு துறையின் கீழ் செயல்படும் ஈரோடு வேளாண் உற்பத்தியாளர்கள் மங்களம் என்கிற பெயரில் மஞ்சள், சமையல் எண்ணெய், பருப்பு வகைகள், சோப்பு ஆகிய அனைத்து பொருட்களையும் விற்பனை செய்து வருகின்றனர். மேலும், இந்த பொருட்கள் அனைத்தும் குறைவான விலையில் நல்ல தரமானதாக இருப்பதாகவும் பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.

இதனால், இந்த பொருட்கள் அனைத்தையும் மாநிலம் முழுவதும் உள்ள ரேஷன் கடைகள் மற்றும் கூட்டுறவு அங்காடிகளில் விற்பனை செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும், ஒவ்வொரு மாவட்டத்திற்கும் மாதந்தோறும் 170 டன் மஞ்சள், 36 மசாலா பொருட்கள், 161 டன் மாவு வகைகள்; 132 டன் உளுந்தம் பருப்பு மற்றும் எண்ணெய் வகைகள் விற்பனை செய்ய வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Trending News

Latest News

You May Like