1. Home
  2. தமிழ்நாடு

குட் நியூஸ்..! தக்காளி விலை விரைவில் குறையும்..!

1

கோயம்பேடு காய்கறி சந்தைக்கு நாள் ஒன்றுக்கு ஆயிரத்து 100 டன் தக்காளி தேவை உள்ள நிலையில் இன்று 400 டன் தக்காளி மட்டுமே வந்துள்ளது. இதனால் ஒரு கிலோ தக்காளி மொத்த விற்பனையில் 110 ரூபாய்க்கும், சில்லறை வியாபாரத்தில் 140 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. மேலும், அடுத்த 10 நாட்களுக்கு தக்காளியின் விலை குறைய வாய்ப்பில்லை என வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

விலை உயர்வை கட்டுப்படுத்த 3 மாநிலங்களில் இருந்து தக்காளியை கொள்முதல் செய்ய மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி ஆந்திரா, கர்நாடகா, மகாராஷ்டிராவில் இருந்து தக்காளியை கொள்முதல் செய்ய மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. வரும் நாட்களில் நாசிக், அவுரங்காபாத், மத்திய பிரதேசத்தில் இருந்து கூடுதல் தக்காளி அனுப்பப்பட உள்ளது. கூடுதல் தக்காளிகள் அனுப்பப்பட இருப்பதால் கூடிய விரைவில் விலை குறையும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

மேலும் ஒரு கிலோ சின்ன வெங்காயம் மொத்த விற்பனையில் 200 ரூபாய்க்கும், சில்லறை விற்பனையில் 220 ரூபாய்க்கு விற்பனையாகிறது. பெரிய வெங்காயம் கிலோ 20 முதல் 25 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுவதால், பொதுமக்கள் சின்ன வெங்காயத்தை வாங்க முடியாமல் திணறி வருகின்றனர்.

Trending News

Latest News

You May Like