1. Home
  2. தமிழ்நாடு

குட் நியூஸ்..! தியேட்டரில் விற்கப்படும் பாப்கார்ன் விலை குறைகிறது ..!!

1

ஜிஎஸ்டி கவுன்சிலின் 50வது கூட்டம் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் எடுக்கப்படும் முடிவுகளின் விளைவாக பல பொருட்களின் விலை குறைய வாய்ப்புள்ளது.

50வது ஜிஎஸ்டி கூட்டத்தில் விலை குறையக்கூடிய பொருட்களின் பட்டியலைப் பார்ப்போம்

மல்டிஃபிளக்ஸ் திரையரங்குகள் பாப்கார்ன், குளிபானங்கள் உள்ளிட்ட சிற்றுண்டிகளுக்கு 18 சதவீத ஜி.எஸ்.டி வரி விதிப்பு செய்ய முடியாது என்று  மத்திய அரசு திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.

தலைநகர் டெல்லியில் 50-வது ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டம் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நடந்தது. புற்றுநோய் இறக்குமதி மருந்துகளுக்கும் மல்டிபிளக்ஸ் திரையரங்க சிற்றுண்டிகளுக்குமான ஜி.எஸ்.டி வரிகளில் தளர்வு அளிக்கப்படுமா என்கிற எதிர்பார்ப்பு நிலவின.

பல்வேறுகட்ட பேச்சுவார்த்தைக்கு பிறகு ஆன்லைன் கேமிங், கேசினோ, குதிரைப் பந்தயம், புற்றுநோய் மருந்துகள், மல்டிபிளக்ஸ் உணவுக் கட்டணம் உள்ளிட்ட பல்வேறு ஜி.எஸ்.டி வரிவிதிப்புகளில் அதிரடி மாற்றங்கள் செய்யப்பட்டன. 

அதன்படி பணம் கட்டி ஆடும் ஆன்லைன் கேமிங், கேஸினோ, குதிரைப் பந்தயம் உள்ளிட்ட விளையாட்டுகளுக்கு செலுத்தப்படும் மொத்த தொகைக்கு 28 சதவீதம் வரி விதிக்கப்படும் என்று முடிவு எடுக்கப்பட்டது. அதேபோன்று மல்டிபிளக்ஸ் திரையரங்குகளில் விற்பனை செய்யப்படும் உணவுப் பொருட்களுக்கு ஜி.எஸ்.டி வரி 18 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. 

இத்துடன் விண்வெளித்துறையில் தனியார் நிறுவனங்கள் பங்களிப்பை அதிகரிப்பதற்கும், ஜி.எஸ்.டி மேல்முறையீட்டுத் தீர்ப்பாயத்தை அமைப்பது குறித்தும் கவுன்சில் முக்கிய ஆய்வுகளை மேற்கொள்ளவுள்ளது. 
 

Trending News

Latest News

You May Like