1. Home
  2. தமிழ்நாடு

குட் நியூஸ்..! அனைத்து ரக நூல் விலையும் கிலோவுக்கு ரூ.10 குறைவு..!

1

பின்னலாடை தயாரிப்புக்கு மிக முக்கிய மூலப்பொருளாக நூல் இருந்து வருகிறது. நூல் விலையை பொறுத்து ஆடைகளின் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. ஆர்டர்களை பெறுகிற நிறுவனங்கள் அப்போதைய நூல் விலை உள்ளிட்ட செலவுகளை கருத்தில் கொண்டு, ஆடைகளின் விலையை வர்த்தகர்கள் மற்றும் வியாபாரிகளுக்கு தெரிவிப்பார்கள். இதன் பின்னர் அவர்கள் கொடுக்கிற ஆர்டர்களின் படி ஆடைகள் தயாரித்து அனுப்பிவைக்கப்படும்.

நூல் விலை சீராக இருந்தால், வர்த்தகம் எந்த ஒரு தொய்வும் இன்றி இருக்கும். ஆனால் நூல் விலை அடிக்கடி மாற்றம் ஏற்படுவதால், தொழில் துறையினர் பல்வேறு பிரச்சினைகளை சந்தித்து வருகிறார்கள். ஏற்கனவே போடப்பட்ட ஒப்பந்தத்தை தாண்டி உற்பத்தி செலவு அதிகரிக்கும் பட்சத்தில், ஆடைகளின் விலையை, நூல் விலையை காட்டி உயர்த்தி கேட்டால், ஆர்டர்கள் ரத்து ஆகும். இப்படிப்பட்ட சூழ்நிலையில் பனியன் தொழில் நடந்து வருகிறது. கடந்த 6 மாத காலங்களாக நூல்களில் எந்தவித மாற்றங்களும் இன்றி ஒரே விலை தொடர்ந்து பின்பற்றப்பட்டு வந்தது.

இதனிடையே நடப்பு மாதத்தில் தீபாவளி பண்டிகையை தொடர்ந்து, நவம்பர் மாதத்திற்கான நூல் விலையை நூற்பாலைகள் இன்று அறிவித்துள்ளது அதன்படி அனைத்து ரக நூல்களுக்கும் கிலோவுக்கு ரூ. 10 குறைத்து அறிவித்துள்ளது. கடந்த 6 மாத காலமாக விலையை எந்தவித ஏற்றமும் இறக்கமும் இல்லாத சூழலில் தற்பொழுது ரூ‌. 10 விலை குறைந்து இருப்பது தொழில் துறையினருக்கு சற்று நிம்மதியை தந்துள்ளது.

இதன்படி (கிலோவுக்கு) 10-வது நம்பர் கோம்டு நூல் விலை ரூ.266-க்கும், 16-ம் நம்பர் ரூ.270க்கும், 20-வது நம்பர் ரூ.270-க்கும், 25-வது நம்பர் ரூ.279-க்கும், 30-வது நம்பர் ரூ.291-க்கும், 34-வது நம்பர் ரூ.298-க்கும், 40-வது நம்பர் ரூ.347-க்கும், 20-வது நம்பர் செமி கோம்டு நூல் ரூ.277-க்கும், 25-வது நம்பர் ரூ.286-க்கும், 30-வது நம்பர், ரூ.280-க்கும், 34-வது நம்பர் ரூ.287-க்கும், 40-வது நம்பர் ரூ.308-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

Trending News

Latest News

You May Like