குட் நியூஸ்..! கிளம்பாக்கம் பேருந்து நிலையம் விரைவில் திறக்கப்படும்..!
சென்னை ராயபுரம் மண்டலம் மண்ணடி, அங்கப்பன் நாயக்கன் தெருவில் உள்ள சென்னை உருது நடுநிலைப்பள்ளியில், ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை பயிலும் மாணவ மாணவிகளுக்கு வழங்கப்படும் முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தினை அமைச்சர் சேகர்பாபு ஆய்வு செய்தார். ஆய்வின் போது சென்னை பெருநகர மாநகராட்சி மேயர் பிரியா, மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் உடன் இருந்தனர்.
ஆய்வுக்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர், கிளம்பாக்கம் பேருந்து நிலையம் அடிப்படை கட்டமைப்புக்கு ஏற்றவாறு திட்டமிடாமல் பணிகள் கடந்த ஆட்சியில் துவங்கப்பட்டதாகவும், எனவே இப்போது கழிவு நீர் வசதி, மருத்துவமனை, குடிநீர் வசதி, ஓய்வறைகள் அனைத்தும் திட்டமிடப்பட்டு, பணிகள் நடைபெற்று வருகிறது என கூறினார்.
அதனை தொடர்ந்து பேசிய மேயர் பிரியா காலை உணவு திட்டம் துவக்கப்பட்டதற்குப் பின் பள்ளிக்கு வரும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது என்றும், அதேபோல் மாணவர்கள் பாடத்தில் கவனம் செலுத்துவதும் அதிகரித்துள்ளதாகவும் கூறினார்.