குட் நியூஸ்..! விமான நிலையத்திலும் ரயில் நிலையத்திலும் இருக்கும் வசதி விரைவில் பஸ் ஸ்டாப்புகளில்...

கோவை மாநகராட்சி விரைவில் மாநகரில் உள்ள பஸ் ஸ்டாப்களில் ஒரு கட்டமைப்பை அறிமுகம் செய்ய உள்ளது.
எந்த எண் கொண்ட பேருந்து எந்த பகுதிகளுக்கு எப்போது செல்லும் என்பதையும், தற்போதைய நேரத்தில் ஒரு பேருந்து எந்த இடத்தில் உள்ளது என்பதை பஸ் ஸ்டாப்பில் நிற்கும் பயணிகள் உடனுக்குடன் தெரிந்து கொள்ளவும் ஸ்பீக்கர் வசதியுடன் கூடிய டிஜிட்டல் தகவல் அறிவிப்பு பலகைகள் பஸ் ஸ்டாப்களில் அறிமுகம் செய்ய மாநகராட்சி முயற்சிகள் எடுத்து வருகிறது.
குறிப்பிட்ட பகுதிகளுக்கு செல்லும் பேருந்துகள் தற்போது எங்குள்ளது, தாமதமாக வருகின்றதா, அல்லது குறித்த நேரத்திற்கு வந்துவிடுமா என்பதை பேருந்துகளில் உள்ள ஜி.பி.எஸ். அமைப்பு பஸ் ஸ்டாப்பில் உள்ள இந்த டிஜிட்டல் ஃபோர்டில் தெரிவிக்கும் படி அமைக்கப்படும்.
இதுபோன்ற வசதி ரயில் நிலையங்களிலும், விமான நிலையங்களும் இருக்கும். இதை கோவை மாநகர பஸ் ஸ்டாப்களில் கொண்டுவர மாநகராட்சி முயற்சி எடுத்துள்ளது. சோதனை முறையில் இதுபோன்ற ஒரு டிஜிட்டல் டிஸ்ப்ளே பாப்பநாயக்கன்புதூர் பஸ் ஸ்டாப்பில் பொருத்தப்பட்டுள்ளது.
இந்த கட்டமைப்பிற்கு பெரிய அளவில் தகவல்கள் திரட்டி அதை இதற்கான தளத்தில் சேர்க்க வேண்டும். இதை கோவை மாநகராட்சி, தமிழக போக்குவரத்து துறையுடன் இணைந்து முன்னெடுத்து வருகிறது. ஆரம்ப நிலையில் உள்ள இந்த திட்டம் முழுமை அடைந்ததும், பிற பஸ் ஸ்டாப்களில் அறிமுகம் செய்யப்படும் என தகவல்கள் கூறுகின்றன.