குட் நியூஸ்..! மேல்முறையீடு செய்த தகுதியானவர்களுக்கு விரைவில் உரிமைத் தொகை வரவு வைக்கப்படும் - தமிழ்நாடு அரசு..!
முன்னாள் முதலமைச்சர் அண்ணா பிறந்தநாளான செப்டம்பர் 15ஆம் தேதி கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினால் தொடங்கி வைக்கப்பட்டது. முதற்கட்டமாக 1.06 கோடி பேருக்கும், 2ஆம் கட்டமாக நவம்பரில் 7.35 லட்சம் பேருக்கு உரிமை தொகை வழங்கப்பட்டது.
இந்நிலையில், மகளிர் உரிமைத் தொகைக்கு மேல்முறையீடு செய்த தகுதியானவர்களுக்கு இம்மாதம் முதலே வரவு வைக்கப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. கலைஞர் மகளிர் உரிமைத் தொகை கோரி 11.85 லட்சம் பேர் மேல்முறையீடு செய்துள்ளனர் குறிப்பிடத்தக்கது.
தகுதியானவர்களுக்கு இம்மாதம் முதலே உரிமைத் தொகை வரவு வைக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது..