1. Home
  2. தமிழ்நாடு

குட் நியூஸ்..! இனி ரயில் பயணத்துக்கு 8 மணி நேரத்துக்கு முன்பே Chart ரிலீஸ்!

1

மத்திய ரெயில்வே வாரியம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

ரெயில் புறப்படுவதற்கு 4 மணி நேரத்திற்கு முன்பு முன்பதிவு செய்த பயணிகளின் அட்டவணை தயாரித்து வெளியிடப்படுகிறது. இது பயணிகளுக்கு சில சிக்கல்களை ஏற்படுத்தியதாக கூறப்பட்டது. எனவே, இந்த நடைமுறையை மாற்றி ரெயில் புறப்படுவதற்கு 8 மணி நேரத்திற்கு முன்பே பயணிகளின் அட்டவணையை தயாரிக்க ரெயில்வே வாரியம் ஆலோசனை வழங்கியது.

மத்திய ரெயில்வே மந்திரி அஸ்வினி வைஷ்ணவ் எந்த முன்மொழிவை ஏற்றுக்கொண்டு, எந்த இடையூறும் இல்லாதவாறு இதை படிப்படியாக செயல்படுத்துமாறும் ரெயில்வே வாரியத்துக்கு உத்தரவிட்டுள்ளார். இந்த நடவடிக்கை மூலம் காத்திருப்போர் பட்டியலில் உள்ள பயணிகள் தங்களுடைய டிக்கெட்டின் நிலையை முன்கூட்டியே தெரிந்துகொள்ள முடியும்.

அவர்களுக்கு ஏற்படும் கடைசிநேர பதற்றமும் தவிர்க்கப்படும். தொலைதூர பயணிகள், புறநகர் பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு இது பயனளிக்கும். காத்திருப்போர் பட்டியல் உறுதிபடுத்தப்படவில்லை என்றால் அதற்கான மாற்று ஏற்பாடுகளை செய்து கொள்வதற்கு இந்த நடைமுறை மிகவும் உதவிகரமாக இருக்கும்.

இதேபோல, முன்பதிவு முறையை ரெயில்வே மேம்படுத்த உள்ளது. நிமிடத்திற்கு 1½ லட்சத்திற்கும் அதிகமான டிக்கெட்டுகளை உருவாக்கும் திறன் கொண்ட புதிய பயணிகள் முன்பதிவு அமைப்பு இந்த ஆண்டு இறுதிக்குள் செயல்பாட்டுக்கு கொண்டுவரப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Trending News

Latest News

You May Like