1. Home
  2. தமிழ்நாடு

குட் நியூஸ்..! ஆசிரியர் பணியில் சேருவதற்கான வயது வரம்பை உயர்வு..!

1

பள்ளிக்‌ கல்வித்‌ துறையின்கீழ்‌ உள்ள பள்ளிகளில்‌, ஆசிரியர்‌ நேரடி நியமனம்‌ தொடர்பாக அரசுப் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர் பணியிட நேரடி நியமனத்திற்கான உச்ச வயது வரம்பு பொதுப் பிரிவினருக்கு 53 எனவும், இதரப் பிரிவினருக்கு 58 எனவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. டெட் தேர்வில் தேர்ச்சி பெற்று ஆசிரியர் பணிக்காக காத்திருக்கும் பணி நாடுநர்களுக்கு உச்சவயது வரம்பு உயர்த்தப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக அமைச்சர் அன்பில் மகேஷ் தனது ட்விட்டர் பக்கத்தில், “04.10.2023 அன்று மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் ஆணைக்கிணங்க அரசுப் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர் பணியிட நேரடி நியமனத்திற்கான உச்ச வயது வரம்பு பொதுப் பிரிவினருக்கு 53 எனவும், இதரப் பிரிவினருக்கு 58 எனவும் நிர்ணயம் செய்யப்படும் என அறிவித்திருந்தோம். அதன்படி 17 நாள்களிலேயே சொன்னதை செய்து முடித்து தற்போது அரசாணையையும் வெளியிட்டுள்ள மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு ஆசிரியப் பெருமக்களின் சார்பாக நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறோம்.#திராவிட_மாடல்” எனக் குறிப்பிட்டுள்ளார்.


 


 

Trending News

Latest News

You May Like