1. Home
  2. தமிழ்நாடு

குட் நியூஸ்..! விரைவில் திருப்பதி பக்தர்களுக்கு சுவையான மற்றும் சுகாதாரமான உணவுகள் மலிவு விலையில் கிடைக்கும்..!

1

திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு பல்வேறு மாநிலங்களில் இருந்தும் நாள்தோறும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்து வருகின்றனர். மழை வெயில் என எதையும் பொருட்படுத்தாமல் பல மணி நேரம் நீண்ட வரிசையில் காத்திருந்து ஏழுமலையானை தரிசனம் செய்து வருகின்றனர்.விடுமுறை நாட்களில் திருப்பதியை திருமலையில் பக்தர்கள் கூட்டம் அலைமோதும். குறிப்பாக அனைத்து வார நாட்களிலுமே பக்தர்களின் கூட்டம் அலைமோதி வருகிறது. திருமலைக்கு வரும் பக்தர்களின் பசியை போக்க திருப்பதி தேவஸ்தானம் சார்பில் எப்போதும் அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் தற்போது ஆந்திர மாநிலத்தில் புதிய அரசு ஆட்சி பொறுப்பேற்றுள்ளது. சந்திரபாபு நாயுடு தலைமையிலான அரசு பொறுப்பேற்றதிலிருந்து திருப்பதி திருமலையில் பக்தர்களின் வசதிக்காக பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

திருப்பதி திருமலை தேவஸ்தானத்தின் புதிய செயல் அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ள ஷியாமளா ராவ் திருமலையில் அதிரடி ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில் தற்போது திருப்பதி திருமலையில் மலிவு விலையில் புதிய உணவகங்களை கொண்டு வர திருமலை திருப்பதி தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது. இது தொடர்பாக செயல் அதிகாரி ஷியாமளா ராவ் பல்வேறு துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார் அப்போது திருமலை திருப்பதி தேவஸ்தான ஹோட்டல்கள் மற்றும் ஜனதா கேண்டின்களில் வழங்கப்படும் உணவின் தரம் மற்றும் அவற்றின் நிர்ணயிக்கப்பட்ட கட்டணங்கள் குறித்து அவர் விவாதித்தார்.இந்திய சமையல் நிறுவனத்தை சார்ந்த சல்லேஸ்வரராவ் மற்றும் தாஜ் குழுமத்தின் பொது மேலாளர் சௌத்ரி போன்ற சமையல் நிபுணர்களிடமிருந்து ஆலோசனைகளையும் அவர் கேட்டுள்ளார்.

தொடர்ந்து பேசிய அவர் ஏழுமலையானை தரிசனம் செய்ய வரும் ஆயிரக்கணக்கான பக்தர்களுக்கு சுவையான மற்றும் சுகாதாரமான உணவுகளை மலிவு விலையில் வழங்குவது நிர்வாகத்தின் முக்கிய குறிக்கோள் என்றும் தெரிவித்தார். 

Trending News

Latest News

You May Like