1. Home
  2. தமிழ்நாடு

குட் நியூஸ்..! டாஸ்மாக் ஊழியர்களுக்கு ரூ. 2,000 ஊதிய உயர்வு..!

Q

மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை மானிய கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது.
அப்போது, துறை சார்ந்து 7 அறிவிப்புகளை வெளியிட்டார் அமைச்சர் செந்தில் பாலாஜி.
“போதைப் பொருட்கள் பயன்படுத்துபவர்களைக் கண்டறிந்து விரைவான சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு அமலாக்கப் பணியகம் – குற்றப் புலனாய்வுத் துறையின் பயன்பாட்டிற்காக 50 கையடக்க வாய்வழி திரவ மருந்து சோதனை சாதனங்கள் வழங்கப்படும்.
சிறப்பாகப் பணியாற்றியதற்காக காவல் துறை அதிகாரிகள் மற்றும் ஆளிநர்களுக்கு வழங்கப்படும் தமிழ்நாடு முதலமைச்சர் காவல்துறை பதக்கங்களின் எண்ணிக்கை 15ஆக உயர்த்தப்படும்.
அமலாக்கப் பணியகம் – குற்றப் புலனாய்வுத் துறை பிரிவில் நிறுவப்பட்ட சைபர் ஆய்வகத்தைப் பயன்படுத்துவதற்கான டிஜிட்டல் தடயவியல் கருவிகள், OSINT (திறந்த மூல நுண்ணறிவு) கருவிகள், சமூக ஊடகங்கள் மற்றும் செய்தி பகுப்பாய்வு கருவிகள் ரூ.50 லட்சம் செலவில் வழங்கப்படும்.
புலனாய்வு சேகரிப்பு பணிகளை கணினிமயமாக்குதல் மற்றும் அமலாக்கப் பணியகம் – குற்றப் புலனாய்வுத் துறையின் மத்திய புலனாய்வுப் பிரிவுக்கு (CIU) ஒரு பிரத்யேக இணையதள வலைவாயில் (web portal) நிறுவப்படும்.
கள்ளச்சாராயம் காய்ச்சுதல் மற்றும் கள்ள மதுபான விற்பனையில் ஈடுபட்டு, சிறைத் தண்டனை பெற்று விடுதலையாகி, மனந்திருந்தியவர்களுக்கு மறுவாழ்வு நிதி வழங்கப்படும். நபர் ஒருவருக்கு ரூபாய் 50,000 மானியமாக வழங்குவதற்கு ஏதுவாக ரூபாய் 5.00 கோடி மறுவாழ்வு நிதி மானியமாக வழங்கப்படும்.
கள்ளச்சாராயம், போலி மதுபானங்கள் மற்றும் போதைப் பொருட்களுக்கு எதிராக தீவிரமான விழிப்புணர்வு பிரச்சாரங்கள் நடத்தப்படும்.
தமிழ்நாடு மாநில வாணிபக் கழகத்தில் 6,567 மேற்பார்வையாளர்கள், 14,636 விற்பனையாளர்கள் மற்றும் 2,426 உதவி விற்பனையாளர்கள், ஆக மொத்தம் 23,629 மதுபான சில்லறை விற்பனைக் கடைப் பணியாளர்கள் தொகுப்பூதிய முறையில் பணியாற்றி வருகிறார்கள். தற்போது வழங்கப்பட்டு வரும் தொகுப்பூதியம் மேற்பார்வையாளர்களுக்கு ரூபாய் 2000, விற்பனையாளர்களுக்கு
ரூபாய் 2000, மற்றும் உதவி விற்பனையாளர்களுக்கு ரூபாய் 2000, 01.04.2025 முதல் மாதந்தோறும் உயர்த்தி வழங்கப்படும். இதற்காக ஆண்டொன்றுக்கு ரூபாய் 64.08 கோடி கூடுதல் செலவாகும்” என்று அறிவித்தார் அமைச்சர் செந்தில் பாலாஜி. 

Trending News

Latest News

You May Like