குட் நியூஸ்..! டாஸ்மாக் ஊழியர்களுக்கு 20 சதவீதம் போனஸ்..?

டாஸ்மாக் நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்களுக்கு போனஸ் எத்தனை சதவீதம் வழங்க வேண்டும் என்பதற்கான பேச்சுவார்த்தை சென்னையில் அமைச்சர் முத்துசாமி தலைமையில் இன்று நடைபெற்றது.
இதில் டாஸ்மாக் பணியாளர்கள் சங்கம் (ஏ.ஐ.டி.யூ.சி.) பொதுச்செயலாளர் தனசேகரன் கொடுத்திருந்த கோரிக்கையில், டாஸ்மாக் பணியாளர்கள் அனைவருக்கும் 20 சதவீதம் மிகை ஊதியம் மற்றும் கருணைத் தொகை வழங்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.அது மட்டுமின்றி பண்டிகை நாட்களில் பணிபுரியும் டாஸ்மாக் பணியாளர்களுக்கு இரட்டிப்பு ஊதியம் வழங்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார்.
இந்நிலையில் டாஸ்மாக் ஊழியர்களுக்கு 20% போனஸ் பெற்று தருவதாக அமைச்சர் முத்துசாமி உத்தரவாதம் கொடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது