குட் நியூஸ்..! தமிழகத்திற்கு 2,600 கனஅடி நீர் திறக்க பரிந்துரை..!
தமிழகத்தில் டெல்டா மாவட்ட விவசாயிகளுக்கு காவிரியில் இருந்து நீர் திறக்க கடந்த மாதம் கர்நாடகா அரசு மறுப்பு தெரிவித்தது. மேலும் அரசு தண்ணீர் திறக்க கூடாது என கண்டித்து கர்நாடகாவில் முழு அடைப்பு போராட்டம் நடத்தப்பட்டது. கடந்த செப்டம்பர் மாதம் நடைபெற்ற காவிரி ஒழுங்காற்று குழு கூட்டத்தில் தமிழத்திற்கு வினாடிக்கு 3000 கனஅடி நீர் திறந்து விட வேண்டும் என பரிந்துரை செய்யப்பட்டது.
அதனை தொடர்ந்து காவிரி ஒழுங்காற்று குழு உத்தரவை செயல்படுத்த கர்நாடக அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால் அதற்கு பல எதிர்ப்புகள் கிளம்பியது. இந்நிலையில் தற்போது தமிழகத்திற்கு 2,600 கனஅடி நீர் திறக்க காவிரி நீர் ஒழுங்காற்று குழு பரிந்துரை செய்துள்ளது. 15 நாட்களுக்கு 2,600 கனஅடி நீரை தமிழகத்திற்கு திறக்க காவிரிநீர் ஒழுங்காற்று குழு பரிந்துரைத்துள்ளது. இது குறித்து வினித் குப்தா தலைமையில் நடைபெற்ற காவிரி நீர் ஒழுங்காற்று குழு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.