குட் நியூஸ்..! தமிழக மாணவர்களுக்கு ‘இந்த’ தொகை அதிகரிப்பு..!

தமிழகத்தில் அரசு பள்ளியில் பயிலும் மாணவர்கள் மற்றும் அரசு பள்ளியில் பயின்று மேற்படிப்பு பயிலும் மாணவர்களுக்கு அரசின் சார்பில் ஏகப்பட்ட சலுகைகள் வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், அரசு விடுதிகளில் தங்கி பயிலும் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு அரசின் சார்பில் மாதந்தோறும் உணவுத்தொகை வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி, விடுதியில் தங்கி பயிலும் அரசு பள்ளி மாணவர்களுக்கு ரூ.1000மும், கல்லூரி மாணவர்களுக்கு ரூ.1,100 ம் வழங்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், மாணவர்களுக்கு வழங்கப்பட்டு வரும் உணவுத்தொகையை உயர்த்த அரசு முடிவெடுத்துள்ளது. அதன்படி, விடுதியில் தங்கி பயிலும் அரசு பள்ளி மாணவர்களுக்கு ரூ.1000 லிருந்து ரூ.1,400 வழங்கவுள்ளதாகவும், கல்லூரி மாணவர்களுக்கு ரூ.1,100 லிருந்து ரூ.1,500 வழங்கவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு, மாணவர்களுக்கான உணவுத்தொகை உயர்த்தப்பட்டுள்ளதால் 1 லட்சத்து 71 ஆயிரத்து 844 மாணவ-மாணவிகள் பயன்பெறுவார்கள்.