1. Home
  2. தமிழ்நாடு

குட் நியூஸ்..! விரைவில் தமிழக ரேஷன் கடைகளில் பாமாயிலுக்கு பதிலாக தேங்காய் எண்ணெய் விநியோகம்..!

1

தமிழகத்தில் உள்ள ரேஷன் கடைகளின் வாயிலாக அரிசி, பருப்பு, கோதுமை, எண்ணெய் முதலான அத்தியாவசிய பொருட்கள் மலிவான விலையில் வழங்கப்பட்டு வருகிறது. மேலும், கடந்த சில வாரங்களாக ரேஷன் கடைகளில் தக்காளியும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இன்னும், பொதுமக்களுக்கு தேவையான பொருட்களை ரேஷன் கடைகளின் வாயிலாக வழங்க அரசு திட்டமிட்டு கொண்டிருக்கிறது.

இந்நிலையில், உழவர் உழைப்பாளர் கட்சி, தென்னை விவசாயம் மேம்பாட்டுக்குழு, விவசாயிகள் சங்கம் என முக்கியமான அமைப்புகள் தமிழக அரசுக்கு சில கோரிக்கைகளை விடுத்தன. அதில், பாமாயில் கொள்முதல் அறிவிப்பை நிறுத்தி வைத்துவிட்டு தேங்காய் எண்ணெய் கொள்முதலுக்கான அறிவிப்பை வெளியிட வேண்டும்.. தென்னை விவசாயிகளை காப்பாற்றவும், உள்ளூர் வணிகத்தை ஊக்குவிக்கவும், தமிழ்நாடு அரசு பாமாயில் இறக்குமதி ஒப்பந்த புள்ளியை ரத்து செய்து, ரேஷன் கடைகளில் தேங்காய் எண்ணெய் விநியோகம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கைகள் விடுத்திருந்தனர்.

மேலும் உழவர் உழைப்பாளர் கட்சி மாநில தலைவர் செல்லமுத்து தலைமையிலான விவசாயிகள், மத்திய நீர்வளத்துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத், வேளாண் துறை இணை அமைச்சர் கைலாஷ் சவுத்ரி ஆகியோரை சந்தித்து, விவசாயம் குறித்த பல்வேறு விவகாரங்களை பேசினர்..அப்போது, தமிழக ரேஷன் கடைகளில் பாமாயிலுக்குப் பதில், தேங்காய் எண்ணெய் வழங்க உத்தரவிட வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில் முதற்கட்டமாக 6 மாவட்டங்களில் உள்ள ரேஷன் கடைகளின் வாயிலாக தேங்காய் எண்ணெய் வழங்கப்படும் எனவும், பொதுமக்களின் வரவேற்பை பொறுத்து தமிழகம் முழுவதும் செயல்படுத்தப்படும் எனவும் மத்திய வேளாண் இணை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

Trending News

Latest News

You May Like