குட் நியூஸ்..! தமிழக ஆம்னி பேருந்து கட்டணம் 5% குறைப்பு..!

தமிழகத்தில் பண்டிகை மற்றும் தொடர் விடுமுறை நாட்களில் ஆம்னி பேருந்து கட்டணம் அதிகரிப்பு என்பது வழக்கம் ஆகிவிட்டது. இது குறித்து அரசு பலமுறை ஆம்னி பேருந்து உரிமையாளர்களுக்கு அறிவுறுத்தல்களை வழங்கியிருந்த போதும் மீண்டும் மீண்டும் கட்டண உயர்வு நடந்து வருகிறது. இந்நிலையில் வரவிருக்கும் தீபாவளி பண்டிகை கால கட்டண நிர்ணயம் குறித்து இன்று போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கருடன், ஆம்னி பேருந்து உரிமையாளர் சங்கத்தினர் பேச்சுவார்த்தை நடத்தினர்.
பேச்சுவார்த்தையின் இறுதியில் ஆம்னி பேருந்துகளின் கட்டணமானது மேலும் ஐந்து சதவீதம் குறைப்பதற்கு ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் ஒப்புதல் அளித்துள்ளனர். இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய போக்குவரத்து துறை அமைச்சர் ஆம்னி பேருந்துகளின் கட்டணம் கடந்தாண்டு 25 சதவீதம் குறைக்கப்பட்ட நிலையில், தற்போது மேலும் ஐந்து சதவீதம் குறைக்கப்பட்டு மொத்தம் 30 சதவீதங்கள் குறைந்த கட்டணம் அறிவிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியிட்டுள்ளார்.