குட் நியூஸ் ..! நடமாடும் கடைகள் மூலம் காய்கறி,பால் விற்க தமிழக அரசு முடிவு..!

சென்னையில் மழை பாதித்த பல இடங்களில் அத்தியாவசிய பொருட்கள் கிடைப்பதில் சிக்கல் நிலவி வருகிறது. மக்கள் வெளியே வர முடியாமல் சிக்கியுள்ளனர்.
இந்தநிலையில், பாதித்த இடங்களில் நடமாடும் கடைகள் மூலம் காய்கறி, பால், பிஸ்கட் உள்ளிட்ட பொருட்களை விற்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது.
சென்னை மணலி, பெருங்குடி, சோழிங்கநல்லூர் உள்ளிட்ட பாதிக்கப்பட்ட பல இடங்களில் கூட்டுறவு துறை சார்பாக 10 நடமாடும் பண்ணை பசுமை காய்கறி கடைகள் அனுப்பப்பட்டுள்ளது.