1. Home
  2. தமிழ்நாடு

குட் நியூஸ்..! தமிழக முழுவதும் புதிதாக 100 அமுதம் அங்காடிகளை திறக்க அரசு நடவடிக்கை..!

1

உணவு துறையின் கீழ் செயல்படும் தமிழக நுகர்பொருள் வாணிப கழகத்தின், அமுதம் பல்பொருள் அங்காடிகள் சென்னை உட்பட 80 இடங்களில் இயக்கப்பட்டு வருகிறது. செல்ப் சர்வீஸ் முறையில் இயங்கும் இந்த அங்காடிகள் அமுதம் அங்காடிகள் என்று அழைக்கப்படுகின்றன.

டிபார்ட்மெண்ட் கடைகளின் போட்டியை சமாளிக்கவும், பொதுமக்கள் எளிதில் அணுகும் வகையிலும் இந்த அமுதம் அங்காடிகள் செயல்பட்டு வருகின்றன. இதனிடையே தொடர்ச்சியாக அமுதம் அங்காடிகளை விரிவுபடுத்துவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

முதற்கட்டமாக கோபாலபுரத்தில் அமுதம் அங்காடி அண்மையில் விரிவுபடுத்தப்பட்டது. அதன்படி அமுதம் அங்காடியில் எந்தெந்த பொருள்கள் எல்லாம் அதிகம் விற்பனை ஆகின்றன என்பது கணக்கெடுக்கப்பட்டு, அந்த பொருட்கள் தட்டுப்பாடின்றி கிடைக்கும் வகையில் இருப்பு வைக்கப்பட்டன. 

அது மட்டுமல்லாது, புதிதாக சில மளிகை பொருட்களும் அங்காடி மூலமாக வெளிச்சந்தையை காட்டிலும் குறைந்த விலையில் விற்பனை செய்யக்கூடிய வகையில் தமிழக அரசு நடவடிக்கை எடுத்தது. இந்த நிலையில், தற்போது 100 புதிய அமுதம் அங்காடிகளை தமிழகம் முழுவதும் திறப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. முதற்கட்டமாக 20 கடைகள் விரைவில் திறக்கப்பட உள்ளன.

Trending News

Latest News

You May Like