குட் நியூஸ்..! தமிழ்நாடு அரசு பள்ளிகளில் 1996 காலியிடங்கள் அறிவிப்பு!
ஆசிரியர் தேர்வு வாரியத்தின் தலைவர் எஸ்.ஜெயந்தி வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: முதுகலை பட்டதாரி ஆசிரியர், உடற்கல்வி இயக்குநர் (கிரேடு-1) ஆகிய பணியிடங்களை நேரடி தேர்வு மூலம் நிரப்புவதற்கான அறிவிப்பு ஆசிரியர் தேர்வு வாரியத்தின் இணையதளத்தில் (www.trb.tn.gov.in) வெளியிடப்பட்டுள்ளது. தமிழ், ஆங்கிலம், கணிதம், வரலாறு உள்ளிட்ட பாடப் பிரிவுகளில் மொத்தம் 1,996 காலியிடங்கள் உள்ளன. கல்வித் தகுதி, விண்ணப்பிக்கும் முறை தொடர்பான அனைத்து விவரங்களும் அறிவிப்பில் தெரிவிக்கப் பட்டுள்ளன. ஆன்லைனில் விண்ணப்பிக்க ஆகஸ்ட் 12ம் தேதி மாலை 5 மணி வரை கால அவகாசம் அளிக்கப்பட்டு இருக்கிறது.
எனவே, விண்ணப்பதாரர்கள் ஆன்லைனில் விண்ணப்பிக்கும் போது, உரிய விவரங்களை சரி பார்த்து அதன் பின்னர் விண்ணப்பிக்க வேண்டும். அறிப்பு தொடர்பான கோரிக்கை மனுக்களை என்ற மின்னஞ்சல் வாயிலாக மட்டும் அனுப்ப வேண்டும். இதர வழியில் அனுப்பப்படும் கோரிக்கை மனுக்கள் பரிசீலிக்கப்பட மாட்டாது என்று ஜெயந்தி கூறியுள்ளார்.
டி.ஆர்.பி. வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, முதுகலை ஆசிரியர் பணிக்கான போட்டித் தேர்வு செப்டம்பர் 28-ம் தேதி ஓஎம்ஆர் ஷீட் வடிவில் நடைபெற உள்ளது.
| நிறுவனம் | ஆசிரியர் தேர்வு வாரியம் (TRB) |
| வகை | தமிழ்நாடு அரசு வேலை |
| காலியிடங்கள் | 1996 |
| பணியிடம் | தமிழ்நாடு |
| ஆரம்ப நாள் | 10.07.2025 |
| கடைசி நாள் | 12.08.2025 |
பதவி: Post Graduate Assistant / Physical Director Grade – I and Computer Instructor Grade-1 (முதுகலை ஆசிரியர், கணினி பயிற்றுநர், உடற்கல்வி இயக்குனர்)
சம்பளம்: Rs.36,900 முதல் Rs.1,16,600 வரை
காலியிடங்கள்: 1996
கல்வி தகுதி: B.Ed, B.Sc.Ed, BA.Ed, B.P.Ed, Post Graduate, Masters Degree, M.P.Ed
குறிப்பு: மேலும் கல்வி தகுதி பற்றி தெரிந்து கொள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணுங்கள்.
வயது வரம்பு:
SC, ST, BC(M), BC, MBC/DNC, Destitute Widow – 58 வயதுக்கு மேற்படாதவராக இருத்தல் வேண்டும்.
General – 53 வயதுக்கு மேற்படாதவராக இருத்தல் வேண்டும்.
விண்ணப்ப கட்டணம்:
ST/SC/ SCA / PWD – Rs.300/-
Others – Rs.600/-
தேர்வு செய்யும் முறை:
- Compulsory Tamil Language Eligibility Test
- Written Examination (Objective OMR Type)
- Certificate Verification
முக்கிய தேதிகள்:
விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 10.07.2025
விண்ணப்பிக்க கடைசி தேதி: 12.08.2025
தேர்வு தேதி: 28.09.2025
விண்ணப்பிக்கும் முறை:
விண்ணப்பதாரர்கள் www.trb.tn.gov.in இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்