1. Home
  2. தமிழ்நாடு

குட் நியூஸ்..! தமிழகத்தில் 11 நகராட்சிகள் தரம் உயர்வு-தமிழக அரசு உத்தரவு!

Q

திருச்செங்கோடு, உடுமலைப்பேட்டை, பழனி உட்பட 11 நகராட்சிகள் தரம் உயர்த்தப்படும் என்று ஏற்கனவே அமைச்சர் கே.என்.நேரு சட்டசபையில் அறிவித்தார். அதன்படி, சில நகராட்சிகள் சிறப்பு நிலையாகவும், சில தேர்வு நிலையாகவும், மற்றவை முதல் நிலையாகவும் தரம் உயர்த்தப்பட்டுள்ளன.

திருச்செங்கோடு, உடுமலைப்பேட்டை, பழனி ஆகிய நகராட்சிகள் இனி சிறப்பு நிலை நகராட்சிகளாக செயல்படும். நந்திவரம்-கூடுவாஞ்சேரி, ராமேஸ்வரம், பல்லடம் ஆகியவை தேர்வு நிலை நகராட்சிகளாக தரம் உயர்த்தப்பட்டுள்ளன.

மாங்காடு, குன்றத்தூர், வெள்ளக்கோவில், அரியலூர், அம்பாசமுத்திரம் ஆகியவை முதல் நிலை நகராட்சிகளாக தரம் உயர்த்தப்பட்டுள்ளன. 11 நகராட்சிகள் தரம் உயர்த்தப்படும் என்று அமைச்சர் கே.என்.நேரு கூறியது போல் நகராட்சிகள் அனைத்தும் தரம் உயர்த்தப்பட்டுள்ளன.

திருச்செங்கோடு, உடுமலைப்பேட்டை உட்பட 11 நகராட்சிகள் இதில் அடங்கும். நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை முதன்மைச் செயலர் கார்த்திகேயன் இது குறித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். இது தொடர்பாக அதில் கூறியிருப்பதாவது:- வருவாய் அளவை அடிப்படையாகக் கொண்டு இந்த தரம் உயர்த்தும் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

சிறப்பு நிலை நகராட்சியாக மாற ஆண்டு வருவாய் ரூ.15 கோடிக்கு மேல் இருக்க வேண்டும். தேர்வு நிலை நகராட்சியாக மாற ரூ. 15 கோடி வரை வருவாய் இருக்க வேண்டும். முதல் நிலை நகராட்சியாக மாற ரூ. 9 கோடி வரை வருவாய் இருக்க வேண்டும். இரண்டாம் நிலை நகராட்சியாக மாற ரூ.6 கோடிக்கு மிகாமல் வருவாய் இருக்க வேண்டும்.

"சிறப்புநிலை நகராட்சியாகத் தரம் உயர்த்த அதன் ஆண்டு வருவாய் ரூ. 15 கோடிக்கு மேலாகவும் , தேர்வுநிலை நகராட்சியாகத் தரம் உயர்த்த ரூ. 15 கோடி வரையிலும், முதல்நிலை நகராட்சியாக நிலை உயர்த்த ரூ.9 கோடி வரையிலும், இரண்டாம் நிலை நகராட்சியாகத் தரம் உயர்த்த ரூ.6 கோடிக்கு மிகாமலும் வருவாய் அளவு இருக்க வேண்டும் " என்று கார்த்திகேயன் கூறியுள்ளார்.

Trending News

Latest News

You May Like