1. Home
  2. தமிழ்நாடு

குட் நியூஸ்..! அம்மன் கோவில்களுக்கு தமிழ்நாடு அரசு இலவசமாக அழைத்துச் செல்கிறது..!

1

பிரபலமான அம்மன் கோவில்களுக்கு இலவசமாக அழைத்துச் செல்கிறது தமிழ்நாடு அரசு. 60 வயதுக்கும் மேற்பட்டவர்களை பிரபலமான அம்மன் கோவில்களுக்கு இலவசமாக அழைத்துச் செல்ல உள்ளது. ஆடி மாதம் மேற்கொள்ளப்பட உள்ளது.   

எனவே விருப்பம் உள்ளவர்கள் தமிழ்நாடு அரசின் இலவச ஆன்மீக பயணத்தில் கலந்து கொள்ளலாம். அதற்கு முறைப்படி இந்துசமய அறநிலையத்துறை அலுவலகத்தில் விண்ணபிக்க வேண்டும். முதல் கட்ட பயணத்துக்கான விண்ணப்ப பதிவு தொடங்கியுள்ளது. எப்படி விண்ணப்பிக்க வேண்டும், நிபந்தனைகள் என்ன என்பதை இங்கே விரிவாக தெரிந்து கொள்ளுங்கள். 

மூத்த குடிமக்கள் (Senior Citizen) 60 வயது முதல் 70 வயதுக்குட்பட்டவராக இருக்க வேண்டும். இதற்கான வயது சான்றிதழ் மற்றும் உடல் நற்தகுதி மருத்துவச் சான்றிதழ் கட்டாயம் சமர்பிக்கப்பட வேண்டும். அதுவும் அங்கீகரிக்கப்பட்ட மருத்துவர்களிடம் இருந்து பெற வேண்டும்.

உடன் சிறு குழந்தைகளை அழைத்து வர அனுமதியில்லை. ஆதார் கார்டு, பான் கார்டு ஆகியவற்றை கொடுக்க வேண்டும். ஆண்டு வருமானம் 2 லட்சம் ரூபாய்க்கு மிகாமல் இருக்க வேண்டும். வருமான சான்று வட்டாட்சியரிடம் பெற்று இணைக்க வேண்டும். இந்து மதத்தைச் சேர்ந்தவராக இருக்க வேண்டும்.இந்த பயணம் மொத்தம் 5 கட்டங்களாக அழைத்துச் செல்லப்பட உள்ளனர். முதல் கட்ட பயணத்துக்கு விண்ணப்பம் சமர்ப்பிக்கப்பட வேண்டிய கடைசி நாள் 11.07.2025, முதல் கட்ட பயணம் தொடங்கும் நாள் - 18.07.2025. 2ம் கட்ட பயணத்துக்கு விண்ணப்பம் சமர்ப்பிக்கப்பட வேண்டிய கடைசி நாள் 18.07.2025, 2ம் கட்ட பயணம் தொடங்கும் நாள் - 25.07.2025.    மூன்றாம் கட்டம் பயணத்துக்கு விண்ணப்பம் சமர்ப்பிக்கப்பட வேண்டிய கடைசி நாள் 25.07.2025. பயணம் தொடங்கும் நாள் 01.08.2025. நான்காம் கட்ட பயணத்துக்கு விண்ணப்பம் சமர்பிக்க வேண்டிய கடைசி நாள் 01.08.2025. பயணம் தொடங்கும் நாள் - 08.08.2025. 5ம் கட்ட பயணத்துக்கு பயணத்துக்கு விண்ணப்பம் சமர்ப்பிக்கப்பட வேண்டிய கடைசி நாள் 08.08.2025. பயணம் தொடங்கும் நாள் - 15.08.2025.

இந்த பயணத்துக்கு செல்ல விரும்புபவர்கள் சென்னை, தஞ்சாவூர், மதுரை, திருச்சி, கோயமுத்தூர், திருநெல்வேலி மற்றும் ஈரோடு ஆகிய ஊர்களில் உள்ள இந்துசமய அறநிலையத்துறை இணை ஆணையர் அலுவலகத்துக்கு விண்ணப்பிக்க வேண்டும்.  இந்துசமய அறநிலையத்துறை இணையதளம் மற்றும் உங்களுக்கு அருகில் உள்ள இந்துசமய அறநிலையத்துறை அலுவலகத்திலும் விண்ணப்பம் பெற்றுக் கொள்ளலாம்.

Trending News

Latest News

You May Like