1. Home
  2. தமிழ்நாடு

குட் நியூஸ் ..! ஊதியத்தை உயர்த்தியது தமிழக அரசு..!

1

தமிழக அரசு பள்ளிகளில் மாற்றுத்திறன் மாணவர்களை பயிற்றுவிக்க தொகுப்பூதிய முறையில் சிறப்பு ஆசிரியர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர். 
 
ஊதிய உயர்வு வழங்க வலியுறுத்தி சமீபத்தில் சிறப்பு ஆசிரியர்கள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வந்தனர். அதனை தொடர்ந்து அரசு பள்ளிகளில் பணியாற்றி வரும் சிறப்பு ஆசிரியர்களுக்கு ஊதிய உயர்வு வழங்கப்படும் என தமிழக அரசு உறுதி அளித்தது.

இந்நிலையில், தமிழகத்தில் தன்னார்வ தொண்டு நிறுவனங்களால் நடத்தப்படும் சிறப்புப் பள்ளிகளில் பணிபுரியும் ஆசியர்களுக்கு ஊதியம் மானியம் வழங்கும் திட்டத்திற்கு தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.

மேலும், மாற்றுத்திறனாளிகளுக்கான கல்வி நிறுவனங்களில் பணிபுரியும் சிறப்பு ஆசிரியர் மற்றும் தசைப் பயிற்சியாளர்களுக்கு வழங்கப்படும் மதிப்பூயத்தை தமிழக அரசு உயர்த்தி வழங்க உத்தரவிட்டுள்ளது. அதன்படி, சிறப்பு ஆசிரியர் மற்றும் தசைப்பயிற்சியாளர்களுக்கான மதிப்பூதியம் ரூ.14,000 இல் இருந்து ரூ.18,000 ஆக உயர்த்தி வழங்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

Trending News

Latest News

You May Like