1. Home
  2. தமிழ்நாடு

குட் நியூஸ்..! தமிழ்நாட்டு விவசாயிகளுக்கு ரூ. 1.20 லட்சம் மானியம் தரும் மாநில அரசு..!

1

விவசாயிகள் மானிய விலையில் விவசாய கருவிகளை வாங்குவதற்கும் அரசு கடனுதவி உள்ளிட்ட உதவிகளை செய்து வருகிறது. அந்தவகையில் இப்போது விவசாயிகள் மானிய விலையில் பவர் வீடர், பவர் டிரில்லர் கருவிகளை வாங்குவதற்கு விண்ணபிக்கலாம். ஆனால், இந்த அறிவிப்பு இப்போது நீலகிரி மாவட்ட விவசாயிகளுக்காக வெளியாகியுள்ளது. நீலகிரி மாவட்ட ஆட்சியர் வெளியிட்டிருக்கும் அந்த அறிவிப்பில், " தமிழ்நாடு அரசு, வேளாண் உற்பத்தியையும், விவசாயிகளின் நிகர வருமானத்தையும் அதிகரித்திட வேளாண்மைப் பொறியியல் துறையின் மூலம் வேளாண் இயந்திர மயமாக்குதலுக்கான துணை இயக்கத் திட்டத்தினை செயல்படுத்தி வருகிறது. 

இத்திட்டத்தின் மூலம் விவசாயத்தில் வேலையாட்கள் பற்றாகுறை நிவர்த்தி செய்யப்படுவதோடு, குறித்த காலத்தில் பயிர் சாகுபடி செய்திடவும் வழி வகுக்கப்படுகிறது. நடப்பு 2025-2026-ஆம் ஆண்டில் தனிப்பட்ட விவசாயிகளுக்கு மானிய விலையில் பவர் டில்லர், விசைக்களையெடுக்கம் கருவி (பவர் வீடர்) வேளாண்மைப் பொறியியல் துறையின் மூலம் வழங்கப்பட்டு வருகிறது. நீலகிரிமாட்டத்திற்கு தற்காலிக இலக்கீடாக பவர் டில்லர் 50 எண்களும், விசைக்களையெடுக்கும் கருவி (பவர் வீடர்) -17 எண்களும் தற்போது ஒதுக்கப்பட்டுள்ளது.

தனிப்பட்ட விவசாயிகளுக்கு மானிய விலையில் பவர் டில்லர் பெற அதிகபட்சமாக ரூ.1.20 இலட்சம் விசைகளையெடுப்பான்களுக்கு அதிக பட்சமாக ரூ.75,000 அல்லது கருவியின் மொத்த விலையில் 50 சதவீதம் இவற்றில் எது குறைவோ அத்தொகை சிறு, குறு ஆதிதிராவிடர், பழங்குடியினர் மற்றும் பெண் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது. இதர விவசாயிகளுக்கு அரசால் நிர்ணயம் செய்யப்பட்ட அதிக பட்சவிலை அல்லது மொத்த விலையில் 40 சவீதம் இவற்றில் எது குறைவோ அத்தொகை மானியாமாக வழங்கப்பட்டு வருகிறது.

மேலும், இத்திட்டத்தில் ஆதிதிராவிடர், பழங்குடியினரர் பிரிவினைச் சார்ந்த சிறு, குறு விவசாயிகளுக்கு அவர்களின் பங்களிப்புத் தொகையினை குறைத்து உதவிடும் வகையில் நடைமுறையில் உள்ள 50 சதவீதம் மானியத்துடன் 20 சதவீதம் கூடுதல் மானியம் தமிழ் நாடுஅரசால் வழங்கப்பட்டு வருகிறது. பொது பிரிவினைச் சாரந்த சிறு, குறு விவசாயிகளுக்கு நடைமுறையில் உள்ள 50 சதவீதம் மானியத்துடன் 10 சதவீதம் கூடுதல் மானியம் விசைக்களை எடுக்கும் கருவிக்கு (பவர் வீடர்) வழங்கப்படுகிறது. மேலும் மானியத் தொகை போக மீதி தொகையான விவசாயிகளின் பங்களிப்பு தொகைளை மட்டும் செலுத்த வேண்டும்.

இத்திட்டத்தில் பயன் பெற விரும்பும் விவசாயிகள் அந்தந்த வட்டார தோட்டக்கலை உதவி இயக்குநர் அலுவலகங்களில் உள்ள வேளாண்மைப்பொறியியல் துறை உதவிப் பொறியாளர் (வே.பொ)-களை தொடர்பு கொண்டு பயனடையுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. மேலும் இத்திட்டம் தொடர்பான கூடுதல் விவரங்களைப் பெற உதகை, கோத்தகிரி, குன்னூர் வட்டார விவசாயிகள் உதவி செயற்பொறியாளர்(வே.பொ), உதகை அவர்களின் அலைபேசிஎண்-7010355954 மற்றும் கூடலூர்
வட்டார விவசாயிகள் உதவிசெயற்பொறியாளர் (வே.பொ), கூடலூர் அவர்களின் அலைபேசி எண்-9443091971 என்ற எண்களில் தொடர்பு கொண்டு பயனடையுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

Trending News

Latest News

You May Like