குட் நியூஸ்..! தமிழகத்தில் பள்ளிகளுக்கு காலாண்டு விடுமுறை நீட்டிப்பு!
பள்ளி மாணவர்களுக்கு காலாண்டு தேர்வு தொடங்கி நடைபெற்று வருகிறது. 11, 12 பயிலும் மாணவர்களுக்கான தேர்வு கடந்த புதன் கிழமை(செப் 18) முதல் தொடங்கிய நிலையில், 6 முதல் 10-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கான காலாண்டுத் தேர்வு செப்.20 தொடங்கியது. செப்டம்பர் 27ம் தேதி வரை நடைபெற உள்ளது.
இதையடுத்து செப். 28 முதல் அக். 2 வரை பள்ளி மாணவர்களுக்கு காலாண்டு விடுமுறை வழங்க திட்டமிடப்பட்ட நிலையில் மீண்டும் அக்டோபர் 3ம்தேதி ( வியாழக்கிழமை) பள்ளிகள் தொடங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
5 நாட்கள் மட்டுமே காலாண்டு விடுமுறை விடப்பட்டிருந்த நிலையில், காலாண்டு விடுமுறையை நீட்டிக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்திருந்த நிலையில், அரசு அதனை பரிசீலித்து தமிழகத்தில் பள்ளிகளுக்கான காலாண்டு விடுமுறை நீட்டிக்கப்படுவதாக பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.
அதன்படி அடுத்த ஞாயிற்றுக்கிழமை (அக்டோபர் 6ம் தேதி வரை) விடுமுறை நீட்டிக்கப்படுவதாகவும், அக்டோபர் 7ம் தேதி (திங்கள்கிழமை) பள்ளிகள் மீண்டும் திறக்கப்படும் என்றும் பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.