1. Home
  2. தமிழ்நாடு

குட் நியூஸ்..! தமிழக மின்வாரிய ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் அறிவிப்பு..!

1

தமிழக மின்வாரியத்தில் உள்ள நிறுவனங்கள் மின் பகிர்மான, உற்பத்தி, பசுமை எரிசக்தி, தொடரைப்பு கழகம் ஆகியவற்றில் பணியாற்றும் முழுநேர ஊழியர்களுக்கும், பயிற்சியில் உள்ள கள உதவியாளர், கணக்கீட்டாளர், கேங்மேன், அலுவலக உதவியாளர்களுக்கும், முழுநேர மற்றும் பகுதிநேர தூய்மை பணியாளர்களுக்கும் 2024- 25ம் நிதியாண்டில் முழுமையாக பணியாற்றி இருந்தால் போனஸ் வழங்கப்படும்.

மின்வாரிய பணியாளர்களுக்கு 8.33 சதவீதம் போனஸ், 11.67 சதவீதம் கருணைத்தொகை வழங்கப்படும். அதில் போனஸ் தொகை அதிகபட்சமாக ரூ.6,997-ம், கருணைத்தொகை ரூ.9,803-ம் என மொத்தம் ரூ.16,800 வரை போனஸாக வழங்கப்படும்.

மேலும் ஓய்வுபெற்ற ஊழியர்கள், பதவி உயர்வு பெற்றவர்கள், இடைநீக்கம் செய்யப்பட்டவர்கள் 2024- 25 காலத்தில் பணியில் இருந்தால் அவர்களுக்கும் இந்த போனஸ் வழங்கப்படும். அக்.15-க்குள் (இன்று) அனைத்து ஊழியர்களுக்கும் போனஸ் வழங்கப்பட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Trending News

Latest News

You May Like