குட் நியூஸ்..! 100 புதிய பேருந்துகளை கொடியசைத்து தொடங்கி வைத்தார் முதல்வர் ஸ்டாலின்..!
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (ஜனவரி 20) சென்னை, மாநகர போக்குவரத்து கழகத்தின் மத்திய பணிமனையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்களின் சார்பில் 634.99 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிதாக 1666 பேருந்துகளை கொள்முதல் செய்து இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு, இதன் முதற்கட்டமாக 100 BSVI பேருந்துகளை பொதுமக்களின் பயன்பாட்டிற்காக கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
முதல்வர் ஸ்டாலின் 19.10.2022 அன்று சட்டப்பேரவையில் 110-விதியின் கீழ் வெளியிட்ட அறிவிப்பில், பொதுமக்களின் பேருந்து பயன்பாடு அதிகமான நிலையில், போக்குவரத்துக் கழகங்களை மேம்படுத்திட பல்வேறு திட்டங்களைத் தீட்டி வருவதாகவும், 500 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 1,000 புதிய பேருந்துகள் கொள்முதல் செய்யப்படும் என்றும், அடிச்சட்டம் (Chassis) நல்ல நிலையில் உள்ள 1000 பழைய பேருந்துகள் புதுப்பிக்கப்படும் என்று அறிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது