1. Home
  2. தமிழ்நாடு

குட் நியூஸ்..! 47 நாட்களுக்கு கோடை விடுமுறை கிடைக்க வாய்ப்பு..!

1

1 முதல் 9-ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு ஏப்ரல் மாதம் முழு ஆண்டு தேர்வு/ மூன்றாம் பருவத் தேர்வு நடைபெற உள்ளது. ஏப்ரல் மாதம் எப்போது முழு ஆண்டு தேர்வு தொடங்கும், முடிவடையும் நாள் மற்றும் கோடை விடுமுறை எத்தனை நாட்கள் என்பதை பள்ளிக் கல்வித்துறையின் நாட்காட்டியின் அடிப்படையில் இந்த பதிவில் அறிந்துகொள்ளலாம்.

தமிழ்நாட்டில் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு மார்ச் 3-ம் தேதி பொதுத் தேர்வு தொடங்கியது. இத்தேர்வு மார்ச் 25-ம் தேதி வரை நடைபெறும். 11-ம் வகுப்பிற்கு மார்ச் 5-ம் தேதி தேர்வு தொடங்கியது. இத்தேர்வு மார்ச் 27-ம் தேதி வரை நடைபெறும். இதே போன்று, 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வு மார்ச் 28-ம் தேதி தொடங்கி ஏப்ரல் 15-ம் தேதி வரை நடைபெற உள்ளது. இதில் கடைசி தேதிக்கு பின்னர் அந்தந்த வகுப்பு மாணவர்களுக்கு கோடை விடுமுறை தொடங்கும்.

பள்ளிக் கல்வித்துறையின் பள்ளி வேலை நாட்கள் நாட்காட்டியின்படி, முழு ஆண்டு தேர்வு அல்லது மூன்றாம் பருவம் தேர்வு ஏப்ரல் 7-ம் தேதி (திங்கட்கிழமை) முதல் தொடங்கி ஏப்ரல் 15-ம் தேதி (செவ்வாய்) வரை நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஏப்ரல் 7 - தமிழ், ஏப்ரல் 8 - ஆங்கிலம், ஏப்ரல் 11- கணிதம், ஏப்ரல் 14- அறிவியல், ஏப்ரல் 15 - சமூக அறிவியல் என அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நாட்களில் 10-ம் வகுப்பு பொதுத் தேர்வு நடைபெறுவதால், தேர்வு தேதிகள் தள்ளிவைக்கப்படவும் வாய்ப்பு உள்ளது. பள்ளிக் கல்வித்துறையின் மூலம் அதிகாரப்பூர்வ தேர்வு அட்டவணை வெளியிட்டப் பின்னர் உறுதியான தேர்வு தேதிகள் தெரியவரும்.

அனைத்து வகுப்புகளுக்கும் முழு ஆண்டு தேர்வுகள் நாட்காட்டியின் குறிப்பிட்டப்படி, ஏப்ரல் 15-ம் தேதி முடிவடைந்தால், மாணவர்களுக்கு கோடை விடுமுறை ஏப்ரல் 16 முதல் தொடங்கி ஜூன் 1-ம் தேதி வரை விடுக்கப்படும். அந்த வகையில், மொத்தம் 47 நாட்கள் அதாவது 1.5 மாத கோடை விடுமுறை கிடைக்கும். 2025-26 கல்வி ஆண்டு ஜூன் 2-ம் தேதி தொடங்கி பள்ளிகள் திறக்கப்படும்.

அனைத்து வகுப்புகளுக்கும் தேர்வு முடிவடைந்த பின்னர், ஆண்டு தேர்வு முடிவுகள் இறுதி செய்தல், 2025-26 கல்வி ஆண்டிற்கான முன் திட்டமிட்டல் உள்ளிட்ட நிர்வாக பணிகள் தொடங்கும். எனவே, ஆசிரியர்களுக்கான வேலைநாட்கள் ஏப்ரல் 30-ம் தேதி வரை உள்ளது. மே 1-ம் முதல் கோடை விடுமுறை தொடங்கும். இடையில், ஏப்ரல் 10 - மகாவீர் ஜெயந்தி, ஏப்ரல் 14 - டாக்டர் அம்பேத்கர் பிறந்த நாள்/ தமிழ் வருட பிறப்பு, ஏப்ரல் 18 - புனித வெள்ளி ஆகிய நாட்கள் அரசு விடுமுறை நாட்கள் ஆகும்.

Trending News

Latest News

You May Like