குட் நியூஸ்..! விசா இல்லாமல் இலங்கைக்கு சுற்றுலா வர 35 நாடுகளுக்கு அனுமதி..!
இலங்கையில் ஏறத்தாழ இரண்டே கால் கோடி பேர் வசிக்கின்றனர். இந்த நாட்டின் பொருளாதாரம் கோவிட்டிற்கு பின்னர் பெரும் சரிவை சந்தித்தது. வரும் காலங்களில் இலங்கை பொருளாதாரம் மேம்படும் என அந்நாட்டு பொருளாதார நிபுணர்கள் நம்புகின்றனர். இதனை தொடர்ந்து இலங்கை விசா இல்லாமல் இலங்கை வர அனுமதி அளிக்கப்பட்டுள்ள முக்கிய நாடுகள் விவரம் வருமாறு;
இந்தியா, சீனா, ரஷ்யா, பிரிட்டன், ஜெர்மனி, பிரான்ஸ், ஜப்பான், நெதர்லாந்து, தாய்லாந்து, பெல்ஜியம், ஸ்பெயின், ஆஸ்திரேலியா, டென்மார்க், கசகஸ்தான், சவுதிஅரேபியா, யு.ஏ.இ., நேபாளம், இந்தோனேஷியா, மலேசியா உள்ளிட்ட முக்கிய நாடுகள் அடங்கும்.
இலங்கை சுற்றுலா பயணிகள் வருகை மற்றும் பொருளாதாரத்தை சீர்தூக்கி நிறுத்த முடியும் என போக்குவரத்து துறை அமைச்சர் பண்டுலா குணவர்த்தனா கூறியுள்ளார்.
இது வரை உலக அளவில் இந்தியர்கள் தாய்லாந்து, பூடான், மலேசியா, பிஜீ என 26 நாடுகளுக்கு விசா இல்லாமல் சுற்றுலா செல்ல முடியும். தற்போது இலங்கையும் சேருகிறது.