குட் நியூஸ்..! நாளை முதல் திருப்பதிக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கம்..!
இந்த ஆண்டு இரண்டு பிரம்மோற்சவங்கள் நடைபெற உள்ளது. இதற்கு முன் 2020 ம் ஆண்டு இரண்வு பிரம்மோற்சவங்கள் நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இந்த ஆண்டு சலகட்லா பிரம்மோற்சவம் செப்டம்பர் 18 ம் தேதி துவங்கி, செப்டம்பர் 26 ம் தேதி வரை நடைபெற்றது. இதனை தொடர்ந்து வரும் அக்டோபர் 15ஆம் தேதி முதல் 23ஆம் தேதி வரை நவராத்திரி பிரம்மோற்சவ விழாவும் வெகு விமரிசையாக நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.ஏழுமலையான் கோவிலை பொறுத்த வரை மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை இதுபோல் ஒரே ஆண்டில் இரண்டு முறை பிரம்மோற்சவங்கள் நடைபெறும்.
வருடாந்திர பிரம்மோற்சவத்தில் நடைபெறும் கொடியேற்றம், கொடி இறக்கம், திருத்தேரோட்டம் ஆகிய நிகழ்ச்சிகள் நவராத்திரி பிரம்மோற்சவத்தில் நடைபெறாது.பிரம்மோற்சவத்தின் முக்கிய நிகழ்ச்சிகளான கருட வாகன புறப்பாடு இம்மாதம் 19ஆம் தேதியும், புஷ்பக விமான புறப்பாடு இம்மாதம் 20ஆம் தேதியும், தங்க தேரோட்டம் 22ஆம் தேதியும், சக்கர ஸ்நானம் 23ஆம் தேதியும் நடைபெறும்.
பிரம்மோற்சவத்தை முன்னிட்டு மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகள், ஒரு வயதிற்கு உள்ளிட்ட குழந்தைகளுடன் வரும் பெற்றோர்கள் ஆகியோருக்கு வழங்கப்படும் முன்னுரிமை தரிசனம் அனுமதி ரத்து செய்யப்பட்டுள்ளது.அதேபோல் கல்யாண உற்சவம் உள்ளிட்ட கட்டண சேவைகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன. கருட வாகன புறப்பாடு நடைபெறும் இம்மாதம் 19ஆம் தேதி திருப்பதி மலை பாதைகளில் மோட்டார் சைக்கிள்களில் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது
இந்நிலையில் திருப்பதி பிரம்மோத்ஸவம் திருவிழாவை ஒட்டி பக்தர்கள் வசதிக்காக சென்னை, திருச்சி, தஞ்சை, கோவை, மதுரை, காரைக்குடி, கும்பகோணம், புதுச்சேரி ஆகிய இடங்களில் இருந்து திருப்பதிக்கு நாளை முதல் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என தமிழ்நாடு போக்குவரத்துக்கு கழகம் அறிவித்துள்ளது
#JUSTIN | திருப்பதி பிரம்மோத்ஸவம் திருவிழாவை ஒட்டி பக்தர்கள் வசதிக்காக சென்னை, திருச்சி, தஞ்சை, கோவை, மதுரை, காரைக்குடி, கும்பகோணம், புதுச்சேரி ஆகிய இடங்களில் இருந்து திருப்பதிக்கு நாளை முதல் சிறப்பு பேருந்துகள் இயக்கம் - SETC அறிவிப்பு#SunNews | #Tirupathi | #SETC pic.twitter.com/V2oDpipaXz
— Sun News (@sunnewstamil) October 12, 2023