1. Home
  2. தமிழ்நாடு

குட் நியூஸ்..! கோவை டூ ஊட்டி சிறப்பு பஸ்கள் இயக்கம்!

1

 ஊட்டி தாவரவியல் பூங்காவில் மலர் கண்காட்சியுடன் தொடங்க உள்ளது. இந்த மலர் கண்காட்சி 10-ந் தேதி தொடங்கி 20-ந் தேதி வரை 10 நாட்கள் நடைபெற உள்ளது.தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் சுற்றுலா பயணிகள், ஊட்டி தாவரவியல் பூங்காவில் நடக்கும் மலர் கண்காட்சியை கண்டு ரசிக்க அதிகளவில் வருகை புரிவார்கள். சுற்றுலா பயணிகள் தங்களது சொந்த, வாடகை வாகனங்கள், அரசு பஸ்களில் பயணித்து ஊட்டிக்கு வருகின்றனர்.

இந்த நிலையில் நீலகிரிக்கு வரும் சுற்றுலா பயணிகள் வரும் மே 7ம் தேதி முதல் ஜூன் 30-ந் தேதி வரை இ-பாஸ் பெற்றே செல்ல வேண்டும் என ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. எனவே, ஊட்டிக்கு சுற்றுலா வரும் பலர் தங்களது சொந்த வாகனங்களை தவிர்த்து அரசு பேருந்துகளில் பயணிக்கும் வாய்ப்புள்ளது.

எனவே இதனை கருத்தில் கொண்டு, பேருந்துகளில் கூட்ட நெரிசலை தவிர்க்கும் வகையில் கோடை சீசனையொட்டி கோவையில் இருந்து இன்று முதல் 25 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளது.

கோவையில் இருந்து ஊட்டி மற்றும் கூடலூர் வரை 80 அரசு பஸ்கள் செல்கின்றன. கோடை சீசனையொட்டி
ஊட்டியில் மலர் கண்காட்சி தொடங்க உள்ள நிலையில், இன்று முதல் கோவையில் இருந்து கூடுதலாக 25 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளது.

Trending News

Latest News

You May Like