1. Home
  2. தமிழ்நாடு

குட் நியூஸ்..! சிறப்பு பேருந்துகள் இயக்கம் 2 நாட்களுக்கு நீட்டிப்பு!

1

தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பொது தங்களது சொந்த ஊர்களுக்கு செல்ல ஏதுவாக அரசு போக்குவரத்து துறை சார்பாக 16,000 மேற்பட்ட சிறப்பு மற்றும் கூடுதல் பேருந்துகள் இயக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து பண்டிகை முடிந்து மக்கள் மீண்டும் தாங்கள் பணிபுரியும் இடத்திற்கு திரும்ப ஏதுவாக ஜனவரி 18ஆம் தேதி வரை சிறப்பு பேருந்து இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் பொதுமக்களின் தேவை கருதி சிறப்பு பேருந்துகள் இயக்கம் மேலும் இரண்டு நாட்களுக்கு நீட்டிக்கப்படும் என போக்குவரத்து துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

மேலும் தொழிலாளர் நலத்துறை சார்பில் போக்குவரத்து தொழிலாளர்கள் பிரச்சனை குறித்து இன்று (ஜன.19) பேச்சுவார்த்தை நடத்தப்படும் எனவும் அவர் கூறினார். விரைவில் அனைத்து பேருந்துகளும் கிளம்பாக்கம் பேருந்து நிலையத்திலிருந்து இயக்கப்படும் எனவும் உறுதியளித்தார்.

கேளம்பாக்கம் பேருந்து நிலையத்தில் ஏற்கனவே அரசு விரைவு போக்குவரத்து கழகம் சார்பில் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது இந்த நிலையில் விழுப்புரம் கும்பகோணம் சேலம் உள்ளிட்ட மற்ற போக்குவரத்து கழக பேருந்துகள் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சென்னையில் இருந்து பல்வேறு பகுதிகளுக்கு இயக்கப்பட்டு வந்த நிலையில், கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திலிருந்தும் இயக்கப்பட்டது.மேலும் படிப்படியாக கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திலிருந்து அனைத்து பேருந்துகளும் இயக்க நடவடிக்கை எடுக்கப்படும். சொந்த ஊரிலிருந்து திரும்பி செல்பவர்கள் சென்னை கோயம்பேடு செல்வதற்கு பேருந்துகள் இயக்கப்பட உள்ளது. அடுத்த ஒரு வாரத்தில் கிளாம்பாக்கத்தில் இருந்து அனைத்து பேருந்துகள் இயக்கப்படுவதற்கும், போக்குவரத்து நெரிசல் உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளை படிப்படியாக கண்டறிந்து அவற்றை சரி செய்யவும் நடவடிக்கை எடுக்கப்படும் என கூறினார் 

Trending News

Latest News

You May Like