1. Home
  2. தமிழ்நாடு

குட் நியூஸ்..! சுனிதா வில்லியம்ஸை கூட்டிவர செல்கிறது ஸ்பேஸ் எக்ஸ்..!

1

அமெரிக்க விண்வெளி துறையில் சமீபத்தில் தனியார் முதலீடுகள் அனுமதிக்கப்பட்டன. அதன்படி தனியார் நிறுவனங்கள் விண்வெளி வீரர்களை விண்வெளிக்கு அழைத்து செல்லலாம் என அறிவிக்கப்பட்டது. முதலில் எலான் மஸ்கின் 'ஸ்பேஸ் எக்ஸ்' நிறுவனம் களமிறங்கி நாசா வீரர்களை விண்வெளிக்கு கொண்டு சென்றது. இதனையடுத்து பிரபல விமான தயாரிப்பு நிறுவனமான போயிங் களமிறங்கியது.

போயிங் சார்பில் 'ஸ்டார் லைனர்' எனும் ஸ்பேஸ் ஷிப் தயாரிக்கப்பட்டது. இது கடந்த ஜூன் 5ம் தேதி அமெரிக்காவின் கேப் கனாவெரல் ஏவுதளத்திலிருந்து சர்வதேச விண்வெளி நிலையத்தை நோக்கி புறப்பட்டது. இதில் 58 வயதான சுனிதா வில்லியம்ஸூம், அவருடன் சக விண்வெளி வீரராக புட்ச் வில்மோரும் பயணித்தனர். இரண்டு நாட்கள் கழித்து, அதாவது ஜூன் 7ம் தேதியன்று ஸ்டார் லைனர் சர்வதேச விண்வெளி மையத்தை அடைந்தது. இது சுனிதா வில்லியம்ஸுக்கு மூன்றாவது பயணமாகும்.

ஆனால் இந்த பயணத்தை தொடங்குவதற்கு முன்னரே பல்வேறு குளறுபடிகள் ஏற்பட்டிருந்தன. இரண்டு மூன்று முறை ஸ்டார் லைனரின் பயணம் தொழில்நுட்ப கோளாறு காரணமாக ஒத்தி வைக்கப்பட்டது. இப்படி இருக்கையில் தற்போது சர்வதேச விண்வெளி நிலையத்திலிருந்து சுனிதா வில்லியம்ஸையும், புட்ச் வில்மோரையும் மீண்டும் பூமிக்கு அழைத்து வருவதில் சிக்கல் ஏற்பட்டிருக்கிறது.

இந்நிலையில் புட்ச் வில்மோர் மற்றும் சுனிதாவில்லியம் இருவரையும் பூமிக்கு அழைத்துவர ஸ்பேஸ் எக்ஸ் க்ரூ-9 விண்கலமானது செப்டம்பர் மாதம் விண்ணில் பாயும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

பூமியிலிருந்து செல்லும் ஸ்பேஸ் எக்ஸ் க்ரூ-9 என்ற விண்கலமானது 4 இருக்கைகள் கொண்டது. செப்டம்பர் மாதம் 24ம்தேதி விண்வெளிக்கு செல்ல இருக்கும் இந்த விண்கலத்தில் நாசா விண்வெளி வீரரான நிக் ஹேக் மற்றும் ரஷ்ய வீரரான அலெக்சாண்டர் கோர்புனோவ் ஆகிய இருவரும் பயணிப்பார்கள் என்று கூறியிருக்கிறது நாசா.

நான்கு பேர் பயணிக்கக்கூடிய இந்த விண்கலத்தில், இவர்கள் இருவரைத்தவிர காலியாக இருக்கும் மற்ற இரு இருக்கைகளில் சுனிதா வில்லியம்ஸ் மற்றும் வில்மோரரின் எடைகொண்ட பொருட்களுடன் விண்வெளிக்கு செல்ல இருக்கிறது.

காரணம் வளிமண்டலத்தைத்தாண்டி இந்த விண்கலம் செல்லும்பொழுது விண்கலத்தின் எடைக்குறைவாக இருந்தால், ஒன்று செயலிழக்கலாம் அல்லது பழுதடையலாம். ஆகவே இதைத் தவிர்க்கும் பொருட்டு வீரர் இருவர்களின் எடைகொண்ட பொருட்களுடன் ஸ்பேஸ் எக்ஸ் க்ரூ-9 விண்வெளிக்குப் பறக்கத் தயாராக இருப்பதாக நாசா தெரிவித்துள்ளது.

Trending News

Latest News

You May Like