1. Home
  2. தமிழ்நாடு

குட் நியூஸ்..! விரைவில் பார்ட் டைம் ஊழியர்களுக்கும் ஓய்வூதியம் கிடைக்குமாம்..!

1

ஒரு முக்கிய திட்டத்தை மத்திய அரசு விரைவில் அறிமுகம் செய்ய இருக்கிறது. இந்த திட்டத்தின் மூலம் இத்தகைய தொழிலாளர்கள் தங்களுக்கு வழங்கப்படும் வருமானத்தில் குறிப்பிட்ட சதவீதத்தை ஊழியர் ஓய்வூதிய திட்டத்திற்கு (Employees' Pension Scheme) செலுத்த வேண்டும். இதில் ஊழியர்கள் செலுத்துவதற்கு அப்பால் அரசும் 3 முதல் 4 சதவீதத்தை பங்களிப்பு செய்யும்.

இந்த முயற்சி முக்கியமாக உணவு விநியோக ஊழியர்கள், ரைட் ஹைலிங் தளங்களில் பணிபுரிபவர்கள் போன்ற தொழிலாளர்களுக்கு மட்டுமல்லாமல் சாப்ட்வேர் ப்ரொபஷனல் மற்றும் பிற பார்ட் டைம் தொழிலாளர்களுக்கும் கொண்டுவரப்படும் திட்டமாகும்.

சில ஆண்டுகளுக்கு முன்பு கொண்டுவரப்பட்ட தொழிலாளர் சட்டங்களில், தொழிலாளர்களுக்கான சமூக பாதுகாப்பு திட்டங்கள் உள்ளடக்கப்பட்டிருந்தன. ஆனால் பல்வேறு மாநிலங்கள் இச்சட்டங்களுக்கு இணங்க எந்த ஒரு திட்டங்களையும் அமல்படுத்தவில்லை. பல பார்ட் டைம் ஊழியர்கள் பல்வேறு தளங்களில் பணி புரிகின்றனர். இதன் காரணமாக பணம் செலுத்தும் நிறுவனங்கள் குறிப்பிட்ட தொகையைப் பிடித்தம் செய்து, ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைப்பிடம் வரவிருக்கும் புதிய திட்டத்தின் மூலம் எளிதாக செலுத்த முடியும்.

EPS திட்டத்தின் விவரங்கள் குறித்து இறுதி செய்தி வருகிறோம். விரைவில் இதை செயல்படுத்த திட்டமிட்டுள்ளோம் என்று தகவல் தெரிந்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். தொழில் வளர்ச்சிக்கு மிக முக்கியமாக கருதப்படும் தொழிலாளர் சட்டங்களை அமல்படுத்த பல மாநிலங்களுடன் மத்திய அரசு இணைந்து செயல்பட்டு வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.

இந்தச் சட்டம் சில பாதுகாப்பு நிதியையும் உள்ளடக்கிய திட்டமாக செயல்பட உள்ளது. இந்த திட்டத்தின் மூலம் தொழிலாளர்களுக்கு சுகாதார பாதுகாப்பு, விபத்து காப்பீடு மற்றும் பிற நலன்களும் வழங்கப்படும். இதில் ஓய்வூதியம் போன்ற பிற நலன்களும் அடங்கும். முழுமையாக தொழிலாளர் சார்ந்த சட்டங்கள் அமல்படுத்தப்பட சில காலம் எடுக்கலாம். ஆனால் தற்போதுள்ள சவால்களை கருத்தில் கொண்டு தொழிலாளர்களுக்காக சமூக பாதுகாப்பு திட்டங்களை விரைவில் செயல்படுத்த முடியும். இது கண்டிப்பாக பார்ட் டைம் தொழிலாளர்களுக்கு உதவிகரமானதாக இருக்கும் என்று தொழில்துறை அமைச்சர் மன்சுக் மண்டேவியா தெரிவித்துள்ளார்.

EPS திட்டத்தை செயல்படுத்துவதற்காக வடிவமைக்கப்பட்ட ஒரு மூத்த அதிகாரியின் கீழ் ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது. தொழிலாளர்கள் வேலை செய்வதை நிறுத்திய காலத்தில் அவர்களுக்கு ஓய்வூதிய சேமிப்பை உருவாக்குவதே இதன் முக்கிய குறிக்கோள் என்று தகவல் நன்கு அறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. பார்ட் டைம் தொழிலாளர்களுக்கு சமூக பாதுகாப்பை வழங்குவது ஒரு முக்கிய அரசாங்க உரிமையாக மாறியுள்ளது. பல ஆய்வுகள் இது போன்ற ஊழியர்களுக்கு பாதுகாப்பு இல்லாததை எடுத்துக்காட்டுகின்றன. கூடுதலாக சில மாநிலங்கள் ஏற்கனவே பார்ட் டைம் தொழிலாளர்களுக்கான சமூக பாதுகாப்பை உறுதி செய்யும் நடவடிக்கைகளை எடுத்துள்ளன.

Trending News

Latest News

You May Like