குட் நியூஸ்..! விரைவில் 2% அகவிலைப்படி உயர்வு.. வெளியாக போகும் அறிவிப்பு..!

நடப்பாண்டு ஜனவரி முதல் ஜூன் மாதம் வரையிலான காலகட்டத்துக்கு 2 சதவீதம் அகவிலைப்படி உயர்த்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதுகுறித்து பிரதமர் மோடி தலைமையிலான அமைச்சரவை முடிவெடுத்து, வரும் 14 ஆம் தேதி அதாவது ஹோலி பண்டிகைக்கு முன்பாக அறிவிப்பு வெளியாகும் என தகவல் வெளியாகி உள்ளது.
அப்படி, 2 சதவீதம் உயர்த்தப்பட்டதால் 53 சதவீதத்தில் இருந்து 55 சதவீதமாக மத்திய அரசு ஊழியர்களின் அகவிலைப்படி உயரும்.
அதன்படி, மாதத்துக்கு 18 ஆயிரம் ரூபாய் அடிப்படை சம்பளம் வாங்கும் ஒருவரின் அகவிலைப்படி, 9 ஆயிரத்து 540 ரூபாயில் இருந்து 9 ஆயிரத்து 900 ரூபாயாக உயரும்.ஒருவேளை 3 சதவீத அகவிலைப்படி உயர்த்தப்பட்டால், மத்திய அரசு ஊழியர்களின் அகவிலைப்படி 540 ரூபாய் உயர்ந்து 10 ஆயிரத்து 80 ஆக நிர்ணயிக்கப்படும்.
மத்திய அரசு ஊழியர்களுக்கு 7வது ஊதியக் குழுவின்படி, ஆண்டுக்கு 2 முறை அகவிலைப்படி உயர்த்தப்பட்டு வருகிறது. அந்த வகையில், கடந்த ஆண்டு ஜூலை 1 முதல் டிசம்பர் 31 ஆம் தேதி வரையிலான அரையாண்டிற்கு 3 சதவீதம் அகவிலைப்படி உயர்த்தப்பட்டு 53 சதவீதமாக நிர்ணயிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.