1. Home
  2. தமிழ்நாடு

குட் நியூஸ்..! பள்ளி திறக்கும் முதல் நாளில் மாணவர்களுக்கு இத்தனை பொருட்களா?

1

வரும் ஜூன் 10ம் தேதி பள்ளிகள், அரசு கலைக் கல்லூரிகள் திறக்கப்பட உள்ளது. நடப்பு கல்வியாண்டில் மாணவர், மாணவியர்களுக்கான கட்டணமில்லா புதிய பேருந்து பயண அட்டை வழங்குவதில் உள்ள கால அளவை கருத்தில் கொண்டு மாநகர போக்குவரத்துக் கழக பேருந்துகளில் கடந்த 2023-24ல் வழங்கப்பட்ட பழைய பயண அட்டை, பள்ளிகளில் வழங்கப்பட்ட அடையாள அட்டை ஆகியவற்றை காண்பித்து தத்தம் இருப்பிடத்திலிருந்து தாம் பயிலும் பள்ளி வரையிலும் மாணவர்கள் சென்று திரும்பலாம் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.

இந்நிலையில் அரசு, அரசு உதவிபெறும், பகுதி நிதியுதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு பள்ளி திறக்கும் முதல் நாளில் (ஜூன் 10) பாடப்புத்தகம் தரப்படும் என தமிழக அரசின் பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது. இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில்," தமிழக முதல்வர் அவர்களின் ஆணையின் படி, தமிழ்நாடு அரசு. பள்ளிக்கல்வித் துறையில் 2024-25 ஆம் கல்வியாண்டில் அனைத்து வகை அரசு / அரசு உதவி பெறும் / பகுதி நிதியுதவி பெறும் பள்ளிகளில் நிதி உதவி பெறும் வகுப்புகள் மற்றும் சுயநிதிப் பள்ளிகளில் மாநிலப் பாடத்திட்டத்தின் கீழ் தமிழ் வழியில் இயங்கும் வகுப்புகள் ஆகியவற்றில் 1 முதல் 12 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ / மாணவிகளுக்குப் பாடப்புத்தகம், நோட்டுப்புத்தகம், புத்தகப்பை. காலணிகள், காலேந்திகள் மற்றும் கம்பளிச்சட்டை மழைக்கோட்டு. பூட்ஸ் மற்றும் சீருடைகள், காலுறைகள், வண்ணப்பென்சில்கள், வண்ணக்கிரையான்கள், மிதிவண்டிகள், கணிதஉபகரணப் பெட்டிகள் மற்றும் புவியியல் வரைபடம் ஆகிய நலத்திட்டப் பொருட்கள் வழங்கப்படவுள்ளது. இவற்றில் பள்ளி திறக்கப்படும் நாளான 10.06.2024 அன்றே மாணவ / மாணவிகளுக்குப் பாடப்புத்தகம். நோட்டுப்புத்தகம் மற்றும் புவியியல் வரைபடம் ஆகிய நலத்திட்டப் பொருட்கள் வழங்கப்படவுள்ளது.

பாடப்புத்தகம் வழங்கப்படும் மாணவ/ மாணவிகளின் எண்ணிக்கை 70,67,094, நோட்டுப்புத்தகம் வழங்கப்படும் மாணவ/ மாணவிகளின் எண்ணிக்கை - 60.75.315, புவியியல் வரைபடம் வழங்கப்படும் மாணவ/ மாணவிகளின் எண்ணிக்கை - 8,22,603" என கூறப்பட்டுள்ளது.

Trending News

Latest News

You May Like