1. Home
  2. தமிழ்நாடு

குட் நியூஸ்..! விரைவில் வந்தே பாரத் ரயிலில் ஸ்லீப்பர் கோச்..!

1

இந்தியாவில் ரயில்வே துறையானது, பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டபடியே உள்ளது.. அந்தவகையில், விமானத்திற்கு நிகரான சொகுசு வசதிகளுடன் அதிவேக ரயிலாக வந்தே பாரத் ரயிலை ரயில்வே தற்போது நாடு முழுவதும் இயக்க தொடங்கியுள்ளது.

வந்தே பாரத் ரயிலில் பல நவீன வசதிகள் உள்ளதால், மக்களால் ஈர்க்கப்பட்டு வருகின்றன. இந்த ரயிலில், என்ஜின், ரயிலின் மற்ற பெட்டிகளுடனேயே இணைந்திருக்கும்..

அத்துடன், ரயிலில் தானியங்கி கதவுகள், ஏசி வசதி, வைஃபை வசதி, ஜிபிஎஸ், ஆடியோ, வீடியோ, பயோ டாய்லெட்டுகள் இப்படி பல வசதிகள் இதில் உள்ளன... இவைகள் உட்பட வந்தே பாரத் ரயிலின் பெட்டிகள் முழுக்க முழுக்க, சென்னை பெரம்பூர் லோகோ ஃபேக்ட்ரியில் தயாரிக்கப்படுகிறது.

1

முழுவதும் குளிரூட்டப்பட்ட பெட்டிகளாக கண்ணாடியால் மூடப்பட்டு சுழலும் இருக்கைகள், தொடுதிரை வசதிகள், நவீன கழிவறைகள் எனப் பல்வேறு சிறப்பம்சங்கள் இடம்பெற்றுள்ளன. ரயில் என்ஜின், ரயிலின் மற்ற பெட்டிகளுடனேயே இணைந்திருக்கும்.. அத்துடன், ரயிலில் தானியங்கி கதவுகள், ஏசி வசதி, வைஃபை வசதி, ஜிபிஎஸ், ஆடியோ, வீடியோ, பயோ டாய்லெட்டுகள் இப்படி பல வசதிகள் இதில் உள்ளதால், பெரும் வரவேற்பை மக்களிடம் பெற்று வருகின்றன. இந்த வந்தே பாரத் திட்டம் பிரதமர் மோடியின் கனவுத்திட்டம் என்கிறார்கள்.. அதனால்தான், ஒவ்வொரு வந்தே பாரத் ரயில் சேவையையும் நேரடியாகவே சென்று பிரதமர் துவக்கி வைத்து வருகிறார்.

வந்தே பார்த் ரயில்களை அடுத்தக்கட்டத்திற்கு மேம்படுத்த மத்திய அரசு இலக்கு நிர்ணயம் செய்துள்ளது. மத்திய ரயில்வே அதிகாரி ஒருவர் கொடுத்துள்ள தகவல் படி முதல் வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயிலை அடுத்த ஆண்டு மார்ச் மாத தொடக்கத்தில் பார்க்க முடியும் என கூறியுள்ளார். ஒருங்கிணைந்த கோச் தொழிற்சாலை 2024 இல் இந்த ஸ்லீப்பர் ரயில் பெட்டிகளை வெளியிட நோக்கமாகக் கொண்டுள்ளது. வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயிலைத் தவிர, வந்தே மெட்ரோ என்ற மலிவு ரயிலின் புதிய வகுப்பையும் ஐசிஎஃப் உருவாக்குகிறது. வந்தே மெட்ரோ 12 பெட்டிகள் கொண்ட ரயிலாகும், இது குறுகிய தூர பயணத்திற்கு பயன்படுத்தப்படும். வந்தே மெட்ரோ ஜனவரி 2024க்குள் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 

Trending News

Latest News

You May Like