1. Home
  2. தமிழ்நாடு

குட் நியூஸ்..! கல்லூரிகளில் மாணவிகளுக்கு என தனி ஓய்வு அறை..!

1

அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் சானிட்டரி நாப்கின் வழங்கும் தானியங்கி இயந்திரங்கள் முறையாக பராமரிக்கப்படாமல் வெறும் காட்சிப் பொருளாக வைக்கப்பட்டு உள்ளது என நாளிதழ்களில் செய்திகள் வெளியாகின. இதன் அடிப்படையில் தாமாக முன்வந்து சென்னை உயர் நீதிமன்றம் விசாரணை நடத்தி வருகிறது.

இவ்வழக்கு பொறுப்பு தலைமை நீதிபதி கிருஷ்ண குமார், நீதிபதி பாலாஜி அடங்கிய அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. தமிழக அரசு தரப்பில் ஆஜரான கூடுதல் தலைமை வழக்கறிஞர், “தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் மாணவிகளுக்காக தலா 5 லட்சம் ரூபாய் வீதம் 8 கோடியே 55 லட்சம் ரூபாய் செலவில் தனி ஓய்வு அறைகள் கட்டப்பட உள்ளன” என்று தெரிவித்தார்.

பள்ளிகளில் நாப்கின் இயந்திரங்கள் பொருத்தப்பட்டுள்ளது தொடர்பான விவரங்கள் சேகரிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டது. இதனை அடுத்து, மாணவிகளுக்கு தனி ஓய்வு அறைகள் கட்டுவதற்கான நிதியை மூன்று வாரங்களில் ஒதுக்கீடு செய்ய தமிழக அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர். அத்துடன், விசாரணையை மூன்று வாரங்களுக்கு தள்ளி வைத்தும் அதிரடியாக உத்தரவு பிறப்பித்துள்ளனர்.

கல்லூரிகளில் ஓய்வு எடுக்க தனி ஓய்வு அறைகள் கட்டப்படும் செய்தி மாணவிகளுக்கு மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது என்றே சொல்லலாம். முன்னதாக தமிழக அரசு மாணவிகளின் கல்விக்கான புதுமைப் பெண் திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை கொண்டு வந்துள்ளது என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

Trending News

Latest News

You May Like