குட் நியூஸ்..! மூத்த குடிமக்கள் இலவசமாக பேருந்தில் செல்ல விண்ணப்பிக்கலாம்..!
சென்னையை சேர்ந்த மூத்த குடிமக்களுக்கான ஜூலை மாதம் முதல் டிசம்பர் மாதம் வரை பயன்படுத்தக்கூடிய ஒரு மாதத்துக்கு 10 டோக்கன்கள் வீதம் 6 மாதத்துக்கான கட்டணமில்லா பஸ் பயண டோக்கன்கள் ஜூலை 31-ந் தேதி வரை தினமும் காலை 8 மணி முதல் இரவு 7.30 மணி வரை வழங்கப்படும்.
இந்த டோக்கன்கள் அடையாறு, பெசன்ட் நகர், திருவான்மியூர், மந்தைவெளி, தியாகராய நகர், சைதாப்பேட்டை, சென்ட்ரல் ரெயில் நிலையம், பிராட்வே, குரோம்பேட்டை, பல்லாவரம், ஆலந்தூர், கிண்டி எஸ்டேட், அய்யப்பன்தாங்கல், வடபழனி, கே.கே.நகர், ஆதம்பாக்கம், அண்ணாநகர், கோயம்பேடு, அம்பத்தூர் எஸ்டேட், அம்பத்தூர் ஓ.டி., ஆவடி, அயனாவரம், ஐ.சி.எப்., தண்டையார்பேட்டை, சுங்கச்சாவடி, எண்ணூர், வியாசர்பாடி, மாதவரம், பாடியநல்லூர், செங்குன்றம், தாம்பரம் மெப்ஸ், பூந்தமல்லி, பெரம்பூர், வள்ளலார் நகர், செம்மஞ்சேரி, திருவொற்றியூர், கிளாம்பாக்கம், குன்றத்தூர் ஆகிய 40 பணிமனை பஸ் நிலையங்களில் வழங்கப்படுகிறது.
இருப்பிட சான்றாக ரேஷன் அட்டை, வயது சான்றிற்காக ஆதார் அட்டை, ஓட்டுனர் உரிமம், கல்வி சான்றிதழ், வாக்காளர் அடையாள அட்டை போன்றவையும் மற்றும் 2 கலர் புகைப்படங்களும் கொடுத்து டோக்கன்களை பெற்றுகொள்ளலாம். அடையாள அட்டை புதுப்பித்தல், புதிய பயனாளிகளும் இதில் பயன்பெறலாம்.